ஆண் சிங்கம்
கிப் போகவும், மங்கல் ஒளியின் உதவியால் சூழ்நிலையை ஆராய முயன்றான் அவன்.
செய்ய வேண்டிய தொழில் என்ன, எதெதை எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் போதிக்கப்பட்டிருந்தது அவனுக்கு. அவன் உடலில் பலமிருந்தது. எந்த வேலையையும் அவனால் செய்ய முடியும். பாறைகளைப் பெயர்த்து தங்கம் சேர்ப்பது கஷ்டமான காரியமல்ல. அவன் அவ்விதமே நினைத் தான்.
தங்கம் விளையும் இடத்திற்கே போய் தங்கத்தை வெட்டிச் சேர்க்கலாம் என்றவுடன் அவனுக்கு அதிக உற்சாகம் ஏற்பட்டிருந்தது. தனது கைவழியாகத் தங்கம் தண்ணிர் பட்ட பாடாக அதிகம் புரளும். பளபளப்பு மங்காத புதிய நாணயத்தைக் கையில் வைத்து, பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போகிற சிறுவர்கள் மாதிரி, அசல் தங்கத்தை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் களிக்கலாம்.
அவனுக்கு ஆசை அதிகரித்தது.
தங்கம் சுரண்டப் பெற்று வெற்றிடங்களாகிவிட்ட பகுதிகளைக் கடந்து, சுவர்கள் போல் பாறைகள் நெடிதுயர்ந்து நின்ற பிராந்தியங்களையும் தாண்டி, கவிந்து சூழ்ந்த பாறைகளின் இடையிலே புகுந்தான் அவன். இன்னின்னார் இந்த இந்தப் பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என்று பிரித்து நிறுத்தப்பட்டனர்.
தங்க ரேகைகள் ஆறுகள் போலவும் கிளைகள். போலவும் பாறைகளில் ஒடிக் கிடப்பதை அவன் உணர முடிந்தது. ஆழ்ந்த இருளிலே பளபளச் சிற்றொளி மின்வெட்டி அலை புரளும் கருங்கடலைப் போல், பொன் னொளி விளக்கின் சுடர் பட்டுப் பளிச்சிட்டுத் திகழ்ந்தன நெடும் பாறைகள். தொழிலாளிகள் முந்திய தினங் களில் வெட்டிக் கொத்திப் பெயர்த்த சுவடுகள் நன்கு தெரிந்தன. தரையில் கட்டிகளும் தூள்களும் சிதறிக் கிடந்தன. –
அவனும் தனது கையுளியால் பாறையைக் கொத்தினான். கல்லுடைத்துத் தங்கம் பறிக்க அமைந்த தனிக்
31