பக்கம்:ஆண் சிங்கம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

பதிலுக்குச் சிரித்தான். கலவரத்தைத் திரைபோட்டு மூட முயன்ற வறண்ட சிரிப்பு. குழந்தையருகில் போனான். அது அதிகம் சிரித்தது. எப்படியோ பராக்குக் காட்டி நகையை ‘அபேஸ் செய்து’ விட்டான். அப்புறம் குழந்தை அழுததோ?...அம்மா, அம்மா என்று கத்தி யதோ?...அவனுக்கு நினைவில்லை. குற்றம் செய்து துடித்த நெஞ்சுடன், தப்பவேண்டும் என்ற துடிப்புடன் வேகமாக நடந்து சந்து பொந்துகள் வழியாகயெல்லாம் திரிந்து மறைந்தான்.

இப்போது அவனுக்கு மாசுமருவற்ற குழந்தை முகம் – வைகறைப் போதிலே முழுதலர்ந்த இனிய புஷ்பம் போன்ற அழகு வதனம் – பனிப்படலமாக நினேவில் எழுந்தது. அதை மறக்கத் தலையை ஆட்டிக் கொண்டான் அறுபத்தைந்தாம் நம்பர் கைதி:

அவன் முகத்தில் வேர்வை முத்துக்கள் துளிர்த்தன. அவன் பலமாக, வேகமாக, விடாமல் தொடர்பாக, ஒரே எண்ணமாய் பாறையைக் கொத்துவதில் முனைந் திருந்தான். அவனது கை நரம்புகள் புடைத்தன. புஜங்களின் தசைக் கூட்டங்கள் விம்மின. அவன் தன்னை, தன் நினைவுகளை, மறந்துவிடத் தீவிரமான உழைப்பில் ஆழ்ந்தான்.

ஒரு நாள் போல் மறுநாள். நேற்று போல் இன்று. உழைப்பு – ஒய்வு – உழைப்பு – உறக்கம். பகல்கூட அரை இரவுபோல்தான் தோன்றியது. பூமிக்கடியிலே. ஆனலும் அவன் இறந்த காலத்தை மறந்துவிட இயலவில்லை.

ஒரு சின்னப் பெண்ணின் கைவளைகளைத் திருடி யிருக்கிருன் அவன். அது கதறத் தொடங்கியதும், பூப்போன்ற அதன் கன்னங்கள் கொதிக்கும் எண் ணெயில் போடப்பட்ட பூரிகள் போல் சிவந்து உப்பி விடும்படியாகப் பேயறை அறைந்துவிட்டு ஒடியிருக் கிருன்.

தனது தாய் கழற்றி வைத்த தங்கச் சரட்டை ‘அமுக்கிச் சென்று’ பணமாக்கியிருக்கிறான், தன் மனைவியின் நகைகளைக் கழற்றி விற்று, குஷாலாகச்

33