பக்கம்:ஆண் சிங்கம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

இல்லை. அவன் மனைவி மட்டுமிருந்தாள். நடுநிசி. அர வம் கேட்டு விழித்துக் கொண்டாள் அவள். கதற முயன்றுள். அவ்ன் அவளே பயமுறுத்தி நகைகளைப் பிடுங்கிக் கொண்டான். பணம் நகைகள் எல்லாம் பத்திரப்படுத்தப் பெற்றுள்ள பெட்டியின் சாவியைக் கேட்டான். அவள் தெரியாது என்ருள். தன்னிடம் இல்லை என்று.சாதித்தாள். ஒ'வெனக்கூச்சலிடத்தொடங் கினுள் வெகுண்டு. வெறி கொண்டு தன்னை மறந்து விட்ட அவன் கையிலிருந்த அரிவாளால் அவளைக் கொன்றன். ஆல்ை அவன் தப்பி ஓடமுடியவில்லை. அகப்படடுக் கொண்டான்.

ஆயுள் தண்டனை பெற்ற அறுபத்தைந்தாம் நம்பர் கைதிக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அவனுக்கு உழைப்பில் ஆரம்பத்திலிருந்த உற்சாக மில்ல்ே. அவன் உள்ளம் குமைந்தது. இதயத்தில் வேதனை அரித்துக் கொண்டேயிருந்தது. மண்டைக்குள் ஏதோ கொதிப்புற்றுக் கொந்தளிப்பது போல் தோன் தும், அந்தச் சூழ்நிலை, அவனைக் கொல்லாமல் கொன்று வந்தது. இனியும் தாங்க முடியாது என்ற நெருக்கடி பிறந்து விட்டது.

அவன் ஜெயிலதிகாரியின் காலிலே விழுந்தான். கண்ணிர் வடித்துக் கெஞ்சினன். என்னல் முடியாது; வேறு எங்காவது, எவ் வேலையாவது செய்ய என்னை அனுப்புங்கள், கல் உடைக்கவோ, செக்கு இழுக்கவோ அல்லது வேறு எக் கடினமான வேலைக்கோ ஏவுங்கள். ஆனுல் இந்தச் சுரங்க வேலை வேண்டாம் என்று அழுது

அதிகாரிக்கு முதலில் விளங்கவில்லை, விசாரித்து, கேள்விகள் மேல் கேள்விகள் போட்டு, ஒரு மாதிரியர்க அவன் மனக் கோளாறைப் புரிந்து கொண்டார்.

அவன் வேறு பணிக்கு மாற்றப்பட்டான். அவனது மனக் குழப்பமும் கொதிப்பும் ஒடுங்கின, அவன் உள்ளத் தில் தெளிவு பிறந்தது. தனது வாழ்வைப் பாழாக்கிய மாயப் பொருளின் உண்மைத் தன்மையை உணர்ந்து

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/38&oldid=543110" இருந்து மீள்விக்கப்பட்டது