பக்கம்:ஆண் சிங்கம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

'முளிக்கிறதைப் பாரேன்–வெட்கமில்லாமே’ என்று எரிந்து விழுந்தது ஒரு ‘ஜப்பான் பொம்மை.’

தன்னைப் பார்த்துச் சிரித்ததாக எண்ணிப் பதிலுக்குச் சிரித்தபடி ஸ்டைல் நடை நடந்தது ஒரு ‘குத்துலக்கை’,

சிரிப்பது போலவும் சிரியாதது போலவும் பாவம் பிடித்து அசைந்தனர் சிங்காரச் சிறுமிகள்...

அவர்களது பாவாடைகள் வட்டமிட்டுச்சுற்றி அலை யெனப் புரண்டன. அடிஅடியாக அவர்கள் முன்னே றும்போது, அலை எழுந்து தவழ்வது போல் ஆடைகள் அசைந்து துவண்டன. அவர்கள் கைகள் ஆடி அசைந் தன. பின்னல் சடைகள் எழிலுற ஆடின.

அவற்றைப் பார்க்கப் பார்க்க அவன் சிரிப்பு அதி கரித்தது. அதன் காரணம் அவன் உள்ளத்திலே எழுந்த ஒரு எண்ண அலை தான்...

பல நூறு பெண்களின் எழில் மயமான கூந்தலை–விதம் விதமான அலங்காரங்களை, அவற்றை அணி செய்யும் மலர் வகைகளை எல்லாம் கைலாசம் பார்த்தான். திடீரென்று அந்த எண்ணம் மின்னல்போல் கிறுக்கியது அவன் சித்த வெளியிலே.

–சீவிச் சிங்காரிக்கப்பட்ட கூந்தல் எல்லாம், ஒற் றைச்சடை – இரட்டைப் பின்னல் – அஜந்தரக் கொண்டை – ரிங் கொண்டை குறுகத் தரித்த குழல் எல்லாம், திடீர்னு மறைந்து போகிறது. மேஜிக் மாதிரி ...சூ மந்திரக்காளி! ...எல்லோர் தலையும் மொட்டை மயம் – வழுக்கு மொட்டை...அந்த நிலையிலே இந்தப் பெண்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

அந்தக் காட்சியை அவன் கற்பனை செய்தபோது தான், சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்தது அவனுக்கு.

‘ஐயோ பாவம்...பைத்தியம்!’ என மற்றவர்கள் எண்ணினர்கள். அதற்கு அவனா பொறுப்பு?...

39