பக்கம்:ஆண் சிங்கம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

–மினுமினுக்கும் ஆடை அலங்காரங்களோடு ஆடல்வல்லிகள் ப்லர் திடீரெனத் தோன்றுகிறர்கள் அந்த அரங்கிலே. கண்களுக்கு விருந்தாகும் நாட்டியம் பயில்கிறார்கள்.

–வானவளையம் நீர்க் கோட்டைத் தழுவுகிற நெடுந் தொலையிலிருந்து கரிய புள்ளிகள் போல் ஏதோ முன்னேறி வருகின்றன. அருகே நெருங்க நெருங்க, அவை பிரமாதமான குதிரைகள் மீது ஜம்மென்று அமர்ந்து வருகின்ற வீரர்கள். அந்த அணிவகுப்பு முன்னே முன்னே வந்து கொண்டிருக்கிறது.

இதை எண்ணும்போதுதான் கைலாசத்துக்கு அந்த நினைப்பு முகிழ்த்தது...

பாய்ந்து வரும் அலைகள் தாழ்ந்து சிதறி உருக் குலைந்து நீரிலேயே கலந்துவிடாமல், விம்மி விம்மி மேலெழுந்து முன்னேறி வந்தால்? மணல்பரப்பை மூழ்கடித்து, மேலும் முன்னேறினால்? ஊருக்குள்ளேயே வந்தால்?

ஊருக்குள்ளே பயங்கர நாடகம் மட்டும்தானா நிகழும்? சோகக் காட்சிகள் மாத்திரம்தானா தோன்றும்? அற்புதமாகவும் இருக்குமே!...

இந்த நினைவின்மீது கற்பனையை கட்டற்ற முறையிலே ஒடவிடுவது அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் அதைப்பற்றியே சிந்தித்தான். கடலோரத்தில் நின்று அலைகளைக் கவனிக்கும் போதெல்லாம், அதோ அந்த அலை பெரிதாக வருகிறது! அதைவிடப் பெரிதாக ஒன்று...எல்லாவற்றினும் பெரிது...இது மணலில் கொஞ்சம் முன்னேற முடியும் என்றே கணக்குப் பண்ணி ஆனந்தம் அடையலானான் அவன்.

ஆயினும் ஒவ்வொரு அலையும்–மகாப்பெரிய அலை கூட–மேலெழுந்து முடியை உலுக்கிக்கொண்டு, உட்புறம் பின்னுக்கு வளைய, தலை முன்னே நீள, எட்டிப் பார்த்து, ‘திடும்’ என்று பேரோசை எழுப்பி விழுந்து, நுரை நுரையாய்த் சிதறிச் செத்தது. அதை மூட–அல்லது தொட்டுப் பிடிக்க–மற்ருெரு பெரும் அலை

42