பக்கம்:ஆண் சிங்கம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

அவள் உலகத்திலுள்ள வெறுப்பை எல்லாம் தனது சின்னஞ்சிறு உள்ளத்தில் சேர்த்து, கூடிய அளவு முகத் தில் கொண்டு வந்து நிறுத்தி, வவ்வவ்வே’ என்று கீழுதட்டைப் பற்களால் கடித்து வலிப்பு காட்டுவாள்.

மற்றப் பிள்ளைகள் சும்மா இருந்து விடுவார்களா? ‘வலிச்ச மோறையும் சுளிச்சுப் போம்–வண்ணாந் துறையும் வெளுத்துப் போம்’ என்று வேறொரு ‘கோரஸ்’ எடுப்பார்கள். அப்புறம் வள்ளியம்மை அழுதுகொண்டு போகவேண்டியதுதானே!

அப்படி அவள் அழுதபடி தனி இடம் தேடிப் போகிறபோது தான் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள் மீது கோபம் கோபமாக வரும். கோபமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கே. பிறகு அதே பெயர் மிக அழகானதாக, இனியதாகத் தோன்றும் வள்ளிக்கு.

எட்டு வயது வள்ளி அம்மை எப்ப பார்த்தாலும் தெருவில் நிற்பதற்கு, அவளோடு சேர்ந்து விளையாடக் கூடிய பிள்ளைகள் அக்கம்பக்கத்து வீடுகளில் இல்லை என்பதும் ஒரு காரணம் தான். அடுத்த தெருவுக்குப் போகலாம். ஆனால் ‘ஏட்டி, நீ வாசல்படி தாண்டினியோ, அவ்வளவுதான். உன்னை வெட்டிப் பொங்கலிட்டிருவேன். ..உன் காலை முறிச்சிருவேன்...உன் முதுகுத் தோலை உரிச்சிருவேன்’ என்ற ரீதியில் மிரட்டக் கூடிய தாயார் இருக்கிறாளே. அம்மாவிடம் கொஞ்சம் பயமிருந்தது வள்ளிக்கு.

தெருவாசல் படியில் நிற்பதனால் பொழுது போகும் என்பதோடு, புதிய புதிய அனுபவங்களும் கிட்டும், அது வள்ளிக்கு நன்ருகத் தெரியும். ஒரு சமயம் வெள்ளைக்கார துரை ஒருவன் அந்த வழியாகப் போனான். தோள் மீது துப்பாக்கியைச் சுமந்து கொண்டு, ‘தொப்பியும் கால்சராயும் பூட்சும் போட் டுக்கிட்டு, செக்கச் செவேல்னு–ஏயம்மா, அது என்ன நிறம்கிறே! கருணைக்கிழங்கை தோலுரிச்சுப் போட்ட மாதிரி–போனான் என்று, அவனைப் பார்த்த பெண்-

49