பக்கம்:ஆண் சிங்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

கள் பேசினார்கள். ‘மலைக்குப் போயிருப்பான். முசலு வேட்டையாட’ என்று ஒருவர் அறிவித்தார்.

அவனைக் கண்டதும் அநேக குழந்தைகள்–சில பெரியவர்கள்கூட–வீட்டுக்குள் ஒடிப்போய் விட்டார்கள். அவ்வூருக்கு வெள்ளைக்காரன் வருவது லேசுப்பட்ட விஷயம் இல்லைதான். அதற்காக அவனை வேடிக்கை பார்த்து நிற்க முடியுமா? இந்த அச்சம் பலருக்கு. ஆனல் வள்ளி அம்மை என்ன செய்தாள்? தன் வலது கையை உயர்த்தி, நெற்றியில் வைத்து *ளலாம், தொரெ!” என்றாள். அவன் திரும்பிப் பார்த்தான். புன்னகை புரிந்தான். குட்மார்னிங் அறிவித்துவிட்டு, தன் வழியே போனான். அப்புறம் வள்ளியைக் கைகொண்டு பிடிக்க முடியவில்லை'! துள்ளினாள். ஆடினாள். குதியாய்க் – குதித்தாள். ‘வெள்ளைக்கார துரை எனக்கு ஸலாம் போட்டாரே!’ என்று பாடினாள். அவள் பெருமை அந்தத்_தெருவில் சிறிது உயர்ந்துவிட்டது என்பதும் உண்மையே.

‘என்ன இருந்தாலும் இந்தப் புள்ளெக்கு ரொம்ப தைரியம்தான்’ என்று பலரும் சொன்னார்கள்...

அது போக்குவரத்து மிகுந்த ரஸ்தா அல்ல. தெருக்காரர்கள் ஏதாவது சோலியின் பேரில் அப்படியும் இப்படியும் போவார்கள். வேறு தெருக்காரர்கள் எங்காவது செல்வார்கள். எப்பவாவது ஒரு வண்டி போகும். கட்டைவண்டி, மை போடப்படாத, சக் கரங்கள் கிரீச்சிட, ‘கடக் டடக்’ என்று ஓசையிட்டுக் கொண்டு நகரும். வண்டி மாடுகளின் கழுத்து மணி ஒசை ஜோராக ஒலிக்கும். நாய் ஒன்று வேலையில்லா விட்டாலும், ஏதோ அவசர அலுவல்மேல் போகிறது போல், தெற்கே இருந்து வடக்கே ஒடும். அங்கொரு வீட்டுத் திண்ணைக்குப் பக்கத்தில் நின்று மோந்து பார்க் கும். பிறகு தும்பைச் செடியை மோந்து பார்க்கும். காலைத் தூக்கி, செடியை நனைத்துவிட்டு, வேகமாக நடக்கும். அப்புறம்: புறப்பட்ட இடத்தில் எதையோ மறதியாக விட்டுவிட்டு வந்ததுபோலவும், அதை எடுப் பதற்காக விரைவது போலவும் அது வடக்கேயிருந்து தெற்கு நோக்கி ஓடியே போகும். பிச்சைக்காரன் வரு-

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/52&oldid=1072198" இலிருந்து மீள்விக்கப்பட்டது