பக்கம்:ஆண் சிங்கம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஆண் சிங்கம்

வான். காய்கறி விற்பவள் வருவாள்.–இப்படி எவ்வ ளவோ வேடிக்கைகள்! ‘எத்தனையோ கோடி இன்பங் கள்'!

அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்துக்கு–களங்கமற்ற நீலப் பெரு விழிகளுக்கு–எல்லாமே இனிமைகள்தான்; எல்லாம் அற்புதமே.

அனைத்தினும் மேலான வேடிக்கை ஒன்று உண்டு. ஒரு மணிக்கு ஒரு தடவை டவுண் பஸ் அந்த வழியாக வரும். கால் மணி நேரம் கழித்துத் திரும்பிப் போகும். அப்படி வருகிற போதும், போகிற போதும் பஸ்ஸினுள் இருப்பவர்களைப் பார்ப்பதில் வள்ளி அம்மை அலுப்படைவதே இல்லை. ஆனால் உள்ளத்தில் ஒரு ஆசையை வளர்த்துவந்தாள் அவள்.

‘தினந்தோறும் எத்தனையோ தடவைகள் கார் வந்துபோகுதே. அதில் நான் ஒரு தடவைகூடப் போக முடியலியே. என்றாவது ஒரு நாள் நானும் காரில் ஏறி, அது போற இடத்துக்கெல்லாம் போவேன். ஆமா. போகத்தான் வேனும்’–இப்படி ஆசைப்பட்டாள் வள்ளி.

குளத்தின் ஒரு மூலையில் எப்படியோ வந்து சேருகிற நீலோற்பலச் செடி, பையப் பைய நீர்ப்பரப்பு முழுவதும் பச்சைப் பசேலென அடர்ந்து படர்ந்து, கொத்துக் கொத்தான வண்ண மலர்களைப் பூத்துச் சொரிவது போல, அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தடத்திலே பதிந்த ஆசை மெது மெதுவாகப் பரவியது. அடர்த்தியாக மண்டியது. இனிய கற்பனை களே மலர வைத்தது.

ஊருக்குள் வந்து திரும்பிய ஒவ்வொரு பஸ்ஸும், அவற்றிலே வந்திறங்கிய–அல்லது, கிளம்பிச் சென்ற –ஒவ்வொரு ஆளும் அவளுடைய எண்ணங்களை ஏக் கங்களை, கனவுகளை வளர்க்கும் வாய்ப்புகளாகவே விளங்கினர், எப்பவாவது அவளுடன் சேர்ந்து விளையா இம் எந்தச் சிறுமியாவது ‘நான் ஊருக்குப் போயிருந் தேன். தாத்தா வீடு டவுனில் இருக்குதே’ என்ற தன் மையில் ஆரம்பித்து, பெருமையடிக்கும்போது வள்ளி

51