பக்கம்:ஆண் சிங்கம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கன்னன்

அம்மையின் உள்ளம் பொருமை கொள்ளும் தனது எரிச்சலையும் பொருமையையும் காட்ட அவள் பிரவுடு! பீத்துரு: என்று கரிப்பாள்.

பிரவுடு என்கிற பதத்திற்கு அர்த்தம் புரிந்தோ புரியாமல்ோ வள்ளி அம்மையைப் போன்ற சிறுமிகள் அதைத் தாராளமாக உபயோகித்து வந்தார்கள். அதை ஒரு ஏச்சுபோல் உபயோகித்தார்கள். அதை அழுத்தமாக உச்சரிப்பதில் வள்ளிக்கு ஒரளவு திருப்தி உண்டாகும். அவ்வளவுதான். அ வ ளு ை- 11 ஆசையோ மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும்.

வள்ளி அம்மை, பஸ்ஸில் போய் வருகிறவர்கள்போக விரும்புகிறவர்களுக்கு அனுபவ மொழி புகன்ற வர்கள் எல்லோரது பேச்சுக்களையும், சந்தர்ப்பம் கிட்டிய போதெல்லாம் கூர்மையாகக் கவனித்து வந்தாள். தானும் சிலரிடம் கேள்வி கேட்டுச் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டாள்.

-அவ்வூரிலிருந்து டவுணுக்கு ஆறு மைல். பஸ் சார்ஜ் நாலரை அணு...போக நாலரை அணு, வர நாலரை அணு; ஆக ஒன்பதணு வேண்டும்...ஒரு பஸ்ஸில் ஏறினால், அது முக்கால் மணி நேரத்துக்குள் டவுண் போய்ச் சேரும். அதிலிருந்து இறங்காமல், இன்னுெரு நாலரை அணுவைக் கொடுத்து டிக்கட் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து விட்டால். அதே பஸ்ஸில் உடனேயே திரும்பிவிடலாம். அதாவது மத்தியானம் 1 மணிக்கு பஸ் ஏறினால் 1-45க்கு டவு ளிைல் இருக்கலாம். அதே பஸ்ஸில் பட்டணப் பிர வேசம் மாதிரிச் சுற்றி வருவதானுல் இரண்டேமுக் கால் மணிக்குள் ஊருக்கு வந்து சேர்ந்துவிடலாம்.

இந்த வாய்ப்பாட்டை வைத்துக்கொண்டு வள்ளி அம்மையின் பிஞ்சு மனம் என்னென்ன கணக்குகளைப் போட்டதோ! சரியான விடை காண்பதற்காக, எவ் வளவு தடவைகள் அழித்துக் கழித்துத் திருத்திக் கஷ்டப்பட்டதோ வழிவகைகளைக் கண்டுபிடிப்பதற் காக என்னென்ன ஆராய்ச்சி பண்ணியதோ!

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/54&oldid=543130" இருந்து மீள்விக்கப்பட்டது