பக்கம்:ஆண் சிங்கம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


கொள்ளத் தயாராகி விடுகிருர்கள். அனுபவம் பெற வேண்டும் என்ற தவிப்பு அவர்களை முன்னே முன்னே இழுக்கிறது.

வள்ளி அம்மைக்கும் அதே நிலை ஏற்பட்டது. அதன் பலன்தான் அவள் பஸ்ளில் தனியாக – தனது துணிச்சலை துணையாக – ஏறி உட்கார்ந்திருந்தாள். அதற்காக அவள் வருத்தப்படவில்லை...

பஸ் வெட்டவெளி நடுவே பாய்ந்து ஓடியது, சிற்றூர்களைத் தாண்டிச் சென்றது. வண்டிகளையும், பாத சாரிகளையும் விழுங்குவது போல் பாய்ந்து, ஒதுங்கி, பின் நிறுத்திவிட்டு வேகமாக முன்னேறியது. மரங்கள் ஒடி வந்தன. ஒன்றும் செய்ய முடியாமல் நின்றன... புதிய இடங்கள், புதிய காட்சிகள் எல்லாமே புதிய அனுபவம்!

திடீரென்று கைகொட்டிச் சிரித்தாள் வள்ளி. எதிரே – பஸ்ஸுக்கு முன்னால் – ஒரு மாடு. அழகான இளம் பசுமாடு. வாலைத் தூக்கிக்கொண்டு, நாலு கால் பாய்ச்சலில் முன்னே ஓடியது. பஸ்ஸிடம் பந்தயமிடுவது போல, மிரண்டு போய், அது முன்னே ஒடிக் கொண்டிருந்தது, டிரைவர் ஹார்ன் அடிக்க அடிக்க, அது துள்ளி ஒடியதே தவிர விலகவில்லை.

அது மிகுந்த வேடிக்கையாகப்பட்டது வள்ளிக்கு... கண்களில் நீர் பொங்கும்வரை, விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்.

‘அம்மா, நாளைக்கு ஊரு கூடிச் சிரிக்கப் போறாகளாம். அப்ப நீயும் சேர்ந்து சிரிக்கணும். பாக்கி வச்சிரு. இப்பவே பூராவையும சிரிச்சுக் கொட்டிப் பிடாதே’ என்றான் கண்டக்டர்.

பசு ஒரு தினுசாக விலகிக்கொண்டது...

பெரிய ஊர் ஒன்றின் நடுவே பஸ் ஓடியது. ‘ரயில்வே கேட் அடைத்துக் கிடந்ததால், காத்து நின்றது. ரயில் வண்டி ஓடியது. பிறகு பஸ் புறப்பட்டு, பரபரப்பு மிகுந்த ஜங்ஷனை அடைந்தது. நட.{[rh||58}}