பக்கம்:ஆண் சிங்கம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

'ஊகும். நான் மாட்டேம்மா!'

சரி. நான் உனக்கு மிக்ஸ்சர், பக்கடா ஏதாவது வாங்கி வரட்டுமா? -

வேண்டாம். என்கிட்டே சாசு இல்லே. ஒரு டிக்கட் கொடு. அது போதும் என்று உறுதியாகச் சொன்னுள் அவள். -

'நீ காசு தரவேண்டாம். நான் வாங்கித் தாறேன். வேண்டாம், வேண்டவே வேண்டாம்! அவள் உள்ளத்தின் உறுதி, குரலிலேயே தொனித்தது.

உரிய நேரம் வந்ததும் பல் புறப்பட்டது. இப் பொழுதும் அதிகமாக ஆட்கள் ஏறவில்லை.

'உன்னை ஊரிலே உங்க அம்மா தேடமாட்டாங் களா. நீ பாட்டுக்கு இப்படி வந்துட்டியே! என்ருன் கண்டக்டர், டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தபோது.

ருத்தரும் தேடமாட்டாங்க. ஆமா என்ருள்

வள்ளி. -

வந்த வழியே மீண்ட பஸ் பிடித்துத் தந்த காட்சி

கள் அவளுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியைப்

புதுப்பிக்கவே உதவின. அவை...

அந்தப் பிரயாணம் மிகுந்த உற்சாகம் பெற்றே விளங்கியது. ஆயினும், ஆனந்தம் பூர்த்தியாகித் திகழ்வதைத் தடுக்க யாரோ சதி செய்தனர் போலும்! பேர்கும்போது அவர்களுக்கு அதிகமான சந்தோஷத் துக்கு வழி செய்த பசுமாடு நடுரோட்டில் செத்துக் கிடந்தது. அவ்வழியே போன வேறுெரு பஸ்ஸில் அடி பட்டு இறந்து கிடந்தது அது.

அழகான ஜீவன், தனது துள்ளலேயும் துடிப்பையும் இழந்து, கட்டையாய்-கோரமாய்-கிகாரமாய் கிடந் தது. கால்களைப் பரப்பிக் கொண்டு. கண்கள் பயங் கரமாக விழிக்க, ரத்தம் திட்டு திட்டாகச் சிதறிக் கிடக்க அது விழுந்திருந்தது, அதற்கு எமனுக வாய்த்த பஸ்ஸும் பக்கத்தில் நின்றது. சிறு கும்பல் கூடியிருந் இது

§§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/62&oldid=543139" இருந்து மீள்விக்கப்பட்டது