பக்கம்:ஆண் சிங்கம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

இந்த பஸ் வேகத்தைக் குறைத்தது. ட்ரைவரும், கண்டக்டரும். மற்றவர்களும் விவரம் அறியத் துடித்த னர். அறிந்தனர். தம் வழியைத் தொடர முனைந்த னர். பஸ் புறப்பட்டு வேகத்தில் ஓடியது.

வள்ளி அம்மையும் அந்தக் காட்சியைப் பார்த் தாள். அப்பதே துள்ளி ஒடிச்சுதே, அந்தப் பசு தானே?... ஆமா அதே பசுதான் என்று கண்டக் டரிடம் சொன்னுள்.

ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை ஒலிபரப்பு வதில் ஆர்வம் உடையவராயினர். வள்ளி பிறகு வாய் திறக்கவேயில்லை......

'பாவம், பசுமாடு செத்துப் போச்சு! அது என்ன ஜோரா ஒடுச்சு! இப்ப இப்படி ஆயிட்டுதே. என்று அவள் மனம் புலம்பியது. பிறகு அவள் அதிகமாக வேடிக்கை பார்க்கவுமில்லை. nட்டோடு வீட்டாக உட் கார்ந்து விட்டாள்...

பஸ் 3-40க்கு ஊர் வந்து சேர்ந்தது.

வள்ளியம்மை எழுந்து நின்று சோம்பல் முறித் தாள். போயிட்டு வாறேன், லார்' என்ரு 1.

போய் வாங்க, மேடம். இனி எப்பவாவது பஸ் சவாரி போகும் ஆசை ஏற்பட்டால், எங்க பஸ்ஸிலயே வாங்க.. காசு கொண்டு வருவதுக்கு மறந்து போயிடா தீங்க என்று சொன்னன் கண்டக்டர்.

அவள் சிரித்தபடி கீழே இறங்கினுள். குதித்துக் கொண்டு ஒடினள். ப வின் நினைப்பு வந்ததோ என் னவோ. நின்று திரும்பிப் பார்த்தாள்; பிறகு மெது வாக நடக்கலானுள்...

வள்ளி அம்மை வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த போது, அவள் அம்மா விழித்திருந்தாள். யாரோ பேச வந்திருந்தார்கள்.--யார் என்று பார்த்தால், தெற்குத் தெரு அத்தை அவள் ஒருத்தி! பேச ஆரம்பித்தால் வாய் லேசிலே ஒயாது. சளசளவென்று.....

禽五

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/63&oldid=543141" இருந்து மீள்விக்கப்பட்டது