பக்கம்:ஆண் சிங்கம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுபிரமை அல்ல

ண்ணையார் சூரியன் பிள்ளை தமது அனுபவத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். சொல்வதற்கும் தயக்கமாக இருந்தது அவருக்கு. தான் ஆலோசனை கோரி அதைச் சொல்லப் போக, மற்றவர்கள் கேலி செய்து பரிகசிக்கத் துணிந்தால் தனது கெளரவம் என்ன ஆவது என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. ஆகவே, ‘பார்க்கலாமே, பார்க்கலாமே!’ என்று தன் எண்ணத்தை ஏலத்தில் விட்டு வந்தார் அவர்.

ஆனால் தொடர்ந்து நாள்தோறும் அதே நிகழ்ச்சி எதிர்ப்படவும் அவர் உள்ளம் குழம்பியது உணர்வுகள் தறிகெட்டு, உடல் பலவீனம் ஏற்பட்டது. தனது எண்ணங்களை வெளியிடாமல், தன் உணர்ச்சிகளை வெளியே காட்டாது ஒடுக்கி வந்தால் கட்டாயம் தனக் குப் பைத்தியமே பிடித்துவிடும் என்று கருதினார் அவர். ஒருவேளை இப்பொழுதே பைத்தியம் பிடித்திருந்ததோ என்னவோ! இல்லையென்ருல் அதை நிஜமாக நிகழ்ந் தது என்று எப்படிக் கொள்வது? யார்தான் அதை நம்புவார்கள்?...

அது நிஜமான தோற்றம் அல்ல என்றும் உறுதியாக நம்ப இயலவில்லை அவரால். அவருடைய கண்கள் அவரை ஏமாற்றிக் கொண்டிருந்தன என்று நினைக்க அவர் தயாராக இல்லை. அவர் மூளைதான் ஏதாவது சித்து விளையாட்டு புரிந்துகொண்டிருந்ததோ? இந்தச் சந்தேகம் அவருக்குச் சிறிதே உண்டு. ஆனல் இதர விஷயங்களில் எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை யே கொடுக்கல் வாங்கல், கணக்கு வழக்கு, பண்ணை விவகாரங்கள் முதலியவற்றில் எல்லாம் அவருடைய அறிவுத் தெளிவு வழக்கம் போல் மிளிரவில்லையா என்ன? அப்படியென்ருல் இந்த நிகழ்ச்சிக்கு என்ன விளக்கம் கொடுப்பது? இதைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் திணறினார் பண்ணையார்.

63