பக்கம்:ஆண் சிங்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


ஏற்றுப் பளீரென ஒளி வீசும் மணிகள்போல் மினு மினுக்கும் கண்கள்... அவனை உற்று நோக்கியவாறி ருந்தன. அக் கண்கள் பொதிந்த தலை பெரிதாய், விகாரமாய், வெறுப்பு ஏற்படுத்துவதாய், ஒருவித பயமும் தருவதாய் இருந்தது. அதற்கேற்ற உடல்... அதில் முளைத்தெழுந்த எட்டுக் கால்கள் உடலைவிடப் பெரியனவாய் அதன் வேக இயக்கத்துக்குத் துணை புரிவனவாய்...

‘ஐயோ, சிலந்திப் பூச்சி!’ என்று அலறியது அவன் மனம். ஐயய்யோ நம்ம மேலே ஏறிவிடும்போல் தோணுதே’ என்று பதறியது.

அவன் விழித்து, அலறியடித்துக்கொண்டு எழுந்தான். அவன் உடல்மீது பூச்சி வேகமாக ஒடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கையினால் தடவித் தள்ளினான் துடித்து எழுந்து, ஸ்விச்சைத் தட்டனான்.

இரவின் ஆழத்தில் – கிணற்றில் விழும் கல் ‘டுபுக்’ கென ஒலி எழுப்புவதுபோல் – அது கனத்த ஓசை எழுப்பியது. ஒளியைக் கொட்டி எங்கும் பூசியது சிறு ‘பல்ப்’.

கண்களைக் கூச வைத்த அவ் ஒளி வெள்ளத்திலே அவன் அதைக் கண்டான். சுவரோடு தரை கூடும் இடத்தில் – சுவரோடு சுவராய், தரையோடு தரையாய் அது ஒண்டியிருந்தது. பெரிய சிலந்திப் பூச்சி. நன்கு வளர்ந்து தடித்தது. அழுக்கு முட்டிய ஏதோ ஒரு உருண்டை போல அருவருப்பு தரும் உடல். அதன் மீதுள்ள ரோமங்களும் புள்ளிகளும் அவன் பார்வையை உறுத்தின. அதன் கண்கள் விளக்கொளியில் மினுமினுத்தன.

அப்படியே அந்தப் பூச்சியை நசுக்கிக் கொல்ல வேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம். ஆனால், வெறும் பாதத்தினால் அதை மிதித்து நசுக்க அஞ்சினான் அவன். பழந்துணியையோ, செருப்பையோ தேடித் திரிந்தன அவன் விழிகள்.

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/77&oldid=1072841" இலிருந்து மீள்விக்கப்பட்டது