உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண் சிங்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


பசிய குச்சிகள் போன்ற கால்களும் பெற்ற சிலந்திப் பூச்சியாக இயங்கியது. நகர்ந்தது. அவன் காலை நோக்கி ஓடிவர முயன்றது.

அவன் பாதம் தானாகவே பின்னுக்கு நகர்ந்தது. இயற்கையின் அற்புதமான ஆற்றலை - சூழ்நிலைக்கு ஏற்ப ஜந்துக்களைப் படைத்து, அவற்றுக்கு இயல்பான பாதுகாப்பு அளிக்கும் தன்மையை - எண்ணி வியப் புற்றான் அவன். அதற்குள் அந்தப் பூச்சி அவன்மீது தாவி ஏறுவதற்காக நெருங்கி விட்டது.

செருப்புக் காலால் அதை நசுக்கிக் கொன்றிருக்கலாம். கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழாமலில்லை. எனினும் அதைக் கொல்ல அவன் கால் நகரவில்லை. மனம் தூண்டவுமில்லை. அந்த விஷப் பூச்சி, மலரும் நிலையிலுள்ள குண்டு மல்லி மொக்கு போல் புதுமையாக இருந்தது; பசுமையாயும் அழகாக் வும் இருந்தது. அத வசீகரிக்கப்பட்டு நின்ற அவனுடைய உள்ளுணர்வு வேகமாக உந்தியது. அவன் விலகி நகர்ந்தான்.

அந்தப் பூச்சியையே கண் வைத்துக் காத்திருந்த ஒரு காக்கை குபீரென்று பாய்ந்தது. தன் கூரிய மூக்கால் பூச்சியைக் கொத்தியது. கொன்றது. கவ்வி எடுத்துப் பறந்தது.

சிதம்பரம் அந்தப் பூச்சிக்காக அனுதாபப் படவில்லை. அவனுக்கு ஏதாவது ஒரு சிலந்திப் பூச்சியால் சாவு ஏற்படும். ‘ஜலமண்டலி’ கடித்தால் மரணம் நிச்சயம் என்றுதானே சொல்கிறார்கள்? - என்று அவன் உள்மனம் அப்பொழுது ஜாதகம் கணித்தது.

* * *


தூக்கம் பிடிக்காமல் கிடந்த சிதம்பரத்தின் கண்கள் ஒளிக் குமிழையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தன. வைரக் கம்பிகள்போல் அதிலிருந்து பாய்ந்த ஒளிக்கோடுகள் எல்லாம் சிலந்தியின் மெல்லிய நூல்கள்

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/84&oldid=1072849" இலிருந்து மீள்விக்கப்பட்டது