உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண் சிங்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


போலவும், ஒவ்வொன்றிலும் ஒரு பூச்சி தொங்கிப் பாய்வது போலவும் தோன்றியது.

ஒரு தடிப் பூச்சி வாயில் வெள்ளை வட்டம் ஒன்றைக் கவ்வியபடி வந்து விழுந்தது. உற்றுக் கவனித்தால், அது அவ் வட்டப் பொருளைத் தன் கால்களால் நன்கு பற்றியிருப்பது புரிந்தது.

சிதம்பரம் ஒரு குச்சியால் விரட்டவும், சிவந்தி அதை நழுவ விட்டுவிட்டது. அவன் அதைக் குத்தினான். அது கிழிந்து, அதனுள்ளிருந்து பலபல பூச்சிகள் - சின்னஞ் சிறு சிலந்திகள் - வெளிப்பட்டுச் சிதறின. குடுகுடு வென ஓடி ஊர்ந்தன. அவனைச் சுற்றி ஓடின. அவன் உடல் மீதும் ஏறின.

‘ஐயோ ஐயோ!’ என்று அலறிக்கொண்டு துள்ளி எழுந்தான் அவன். கைகளால் நெடுகிலும் தேய்க்க முயன்றான். எனினும் பூச்சிகள் வேகமாக ஊர்ந்து படர்ந்தன. பெரிய பூச்சிகூட - ‘இதுதான் ஜலமண் லியோ?’ - அவனைத் துரத்தி வந்தது.

செய்யும் வகை புரியாதவனாய் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கைகளை ஆட்டி அசைத்து, ‘ஐயோ, ஐயோ!’ என்று கூச்சலிட்டபடி ஓடலானான் அப்பாவி சிதம்பரம்.

*

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/85&oldid=1072851" இலிருந்து மீள்விக்கப்பட்டது