பக்கம்:ஆண் சிங்கம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்நாகரிகம் மனிதரை இயந்திரங்களாகவும், மிருகங் களாகவும் மாற்றிவிட்டது; அலங்கார பொம்மைகனாக வளர்த்து வருகிறது. மனிதரை மனிதராக வாழ வகை செய்யவில்லை அது என்பது மட்டுமல்ல; மனித வர்க்கத்திடையே காணப்பட்ட சிறிதளவு ஈவு–இரக்கம் – தயை– நல்லதனம் முதலிய பண்புகளை வறளடித்து வருகிறது என்பதை மறப்பதற்கில்லை.

இந்த உண்மைக்கு ‘மற்றுமோர் சான்று’ என்று கூறலாம் அன்றொரு நாள் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை–

முற்பகல் பத்துமணி ஆகிவிட்டது. நாகரிக நகரத்தின் வீதிகள் எல்லாம், வீதிகளில் போகும் வாகனங்கள் எல்லாம், வாகனங்களில் இடம் அகப்படாமல் வேக நடை நடந்து செல்வோர் எல்லாம் நகரின் ஜன மிகுதியை, அவசர இயக்கத்தை அலுவல் பரபரப்பை விளம்பரப்படுத்துகிற நேரம் அது. மனித இனத்தில் நிலைபெற்று வளரும் சுயநலத்தின் தன்மையைப் படம் பிடித்துக் காட்டும் நேரம் அது.

அவ் வேளையில் வீதிவழியே போய்க் கொண்டிருந் தவர்களில் ஒருவன்–தலையில் சிறு மூட்டையும், மன சில் பெருங்கவலையும் சுமந்து நடந்த மனிதன்–சூழ்நிலை மறந்த காரணத்தால் பெரிய விபத்து ஒன்றில் சிக்கியிருக்க வேண்டியவன், சுய முயற்சியினாலோ புண்ணிய வசத்தாலோ தப்பிச் சிறு விபத்தில் விழ நேர்ந்தது. எங்கோ பார்வையும் எதிலோ நினைவுமாக நடந்த அவன் ஒரு காரில் அகப்படவேண்டியவன். கடைசிக் கட்டத்தில் திடுக்கிட்டுச் சமாளித்துக் கொண்டு, துள்ளித் தாவி விட்டான். ஆயினும் தப்பி ஒதுங்கினான் என்று சொல்வதற்கில்லை. கால் சறுக்கித் தள்ளாடித் தரையிலே விழுந்துவிட்டான். ‘தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று’ என்ற மாதிரி.

டிரைவர் தனது ஆத்திரத்தைக் கடுமையான சொற்களில் பொதிந்து வீசிவிட்டு, காரை ஒட்டிச் சென்றான். காரில் இருந்தவர்கள் இஷ்டம்போல் பேச ஒரு வாய்ப்பு கிட்டியது.

கீழே விழுந்தவன் விழுந்தே கிடந்தான். அவனால் வாகனாதிகளுக்கோ, வாகனங்களால் அவனுக்கோ

85