பக்கம்:ஆண் சிங்கம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


எவ்விதமான பாதகமும் ஏற்பட முடியாத இடத்தில் தான் அவன் கிடந்தான்.

எங்கிருந்தோ ஆட்கள் ஒன்றிரண்டு பேராக வந்து கூடிப் பலராக மொய்த்து நின்றனர். வேடிக்கை பார்க்கத்தான்...

நகரம் நாகரிக அந்தஸ்திலே உயர்ந்து நின்றாலும் கூட, வேடிக்கை பார்க்க என்று குழுமுகிற நபர்களின் பண்பாட்டில் மாறுதல் ஏற்படுவதில்லை.

‘குடிபோதையோ? மயங்கி விழுந்து விட்டானே?’ ‘காயம் ஏற்பட்டுவிட்டதா?’ ‘காக்கா வலிப்பாக இருக்கும்’ ‘ரத்தம் வந்திருப்பதுபோல் தெரியுதே!’ ‘எந்த ஊரு ஆளு?’ – இப்படிப் பலரும் பலவாறு கவலைப்படலாயினர்.

புதிதாக வந்தவர்கள் அங்குமிங்கும் சுற்றியும், கழுத்தை நீட்டி எட்டிப் பார்க்க முயன்றும், ‘என்னது? என்னவாம்? யார் அது?’ என்று கேட்டும் விஷயம் அறியத் தவித்தனர்.

சிலர் நின்று கவனித்தனர். பலர் சும்மா பார்வை எறிந்துவிட்டுப் போனார்கள். சிலர் ‘ஏனோ தானோ – என்னவோ ஏதோ’ என்றபடி அவர்கள் போக்கிலே முன்னே சென்றார்கள். வாகனங்களில் அமர்ந்து வேக யாத்திரை போனவர்களின் பார்வையைக் கவரத் தவறவுமில்லை. இச் சிறு கூட்டம்.

‘நமக்கென்ன! நம்ம வேலையே நிறையக் கிடக்குது’ என்ற எண்ணத்தில், பிற விஷயங்களில் தலையிடும் நினைப்போ ஆர்வமோ இல்லாதவர்களாய் நடந்தவர் களின் தொகை அதிகமானதே.

விழுந்தவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து விமரிசனம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவருக் கேனும் தோன்றாத ஒரு உணர்ச்சி, வழியே போன வேறொரு ஆசாமிக்கு ஏற்பட்டது.

அவன் தலைமீது ஒரு கூடையை சுமந்து நடந்து கொண்டிருந்தான் என்றாலும், அவன் உள்ளத்தில்

86