பக்கம்:ஆண் சிங்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ‘ஐயா, இதை ஒரு கை பிடியுங்களேன்! இதைக் கொஞ்சம் தூக்கி...’ என்று கெஞ்சி நின்றான் அவன்.

அட போய்யா! நீ ஒண்னு!’ என்றெல்லாம் சொல்லெறிந்து சென்றார்கள் சில கனவான்கள். அவன் தங்களை அப்படி வேலை ஏவியதன் மூலம் தங்களேயே அவமதித்து விட்டான் என்று நம்பியவர்கள் போல், மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு’ நடந்தார்கள் பலபேர்.

ஆள் நடமாட்டம் அதிகமிருந்த அந்த வீதியின் ஒரத்திலே, மற்றுமொரு உண்மையான மனிதன் வரமாட்டானா என்று ஏங்கி நிற்பவன் போல, அவன் நின்றான், போகிறவர் வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

நாகரிக நதியின் பெருங்கிளை போன்ற அந்த ரஸ்தாவில் அவசரமும் வேகமும் நெருக்கமும் போக்குவரத்தாக முட்டி மோதிக்கொண்டு அலைபுரண்டதில் குறைவு இல்லைதான். அவரவர் கவலை அவர் அவர்களுக்கு! இதுதானே இந்த யுகதர்மமாக விளங்குகிறது?

*

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/90&oldid=1072854" இலிருந்து மீள்விக்கப்பட்டது