பக்கம்:ஆண் சிங்கம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தனிமை


ஷ்டலிங்கம் பிள்ளையை ஒரு வியாதி பற்றியிருந்தது. தனிமை எனும் நோய் தான் அது.

“தனிமை இனியது. சாரம் நிறைந்தது, என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையே. ஆயினும், தனிமை சிலருக்குச் சில வேளைகளில் தவிர்க்க முடியாத வியாதியாய்...தாங்க இயலாத சுமையாய்...மாற்றுக் காண முடியாத மனப் புழுக்கமாய் விளங்குவதும் உண்டு.

இஷ்டலிங்கம் பிள்ளைக்கு எவ்விதமான குறைவும் கிடையாது என்றே சொல்ல வேண்டும். பெரிய உத்தியோகத்தில் இருந்தார் அவர். எல்லோரும் கெளரவிக்கும்படியான அந்தஸ்து அவருக்கு இருந்தது. அவரைக்கண்டு-அவர் பெயரைக் கேட்டும் கூட-பயப் படுவதற்கும் பக்தி பண்ணுவதற்கும் பலர் இருந்தார்கள். ‘பெரியவர். கண்டிப்பானவர், தமது வேலைகளைக் குறைவின்றிச் செய்பவர். மற்றவர்களும் அவரவர் அலுவல்களை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்’ - இவ்வாறெல்லாம் அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள் நிலவின.

அதிகாரம், அந்தஸ்து, பெயர், பணம் இவற்றுக்கு ஏற்றாற் போல் ஆளும் வாட்டசாட்டமாக இருந்தார் அவர். நல்ல உயரம். அதற்குத் தகுந்த பருமன். கம்பீரமான தோற்றம். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்கள் கூட ஆளைப் பார்த்ததுமே ‘யாரோ பெரிய மனிதர்’ என்று உணர்ந்து, பயம் அல்லது பக்தி அல்லது மரியாதை காட்டியே தீருவர்.

அவர் தெருவில் போனார் என்றால், எதிரே வருகிற வர்கள் கும்பிடும், சலாமும் அளித்து விலகிச் செல்வார் கள். மேலே கிடக்கிற துண்டை மரியாதையாக நீக்கிக் கையில் பிடித்துக்கொண்டு நடப்போரும்

89