பக்கம்:ஆண் சிங்கம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

உண்டு. வீட்டுத் திண்ணைகளிலும் வாசல் முன்பும் அமர்ந்து வம்பு பேசிக் கொண்டிருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்தி விட்டு எழுந்து நிற்பார்கள். சில பெண்கள் ஒடி ஒளிந்து கொள்வதுமுண்டு.

இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று இஷ்டலிங்கம் பிள்ளை சொல்லவுமில்லை; எதிர்பார்க் கவும் இல்லை. இவ்வாறு மரியாதை காட்டாமல் இருந்தால் அவர் கோபித்துக் கொள்ளமாட்டார்; குறை கூறப் போவதுமில்லை. ஆ ன ல், பக் தி பண்ணியும் பயந்து நடந்தும் சிலரைப் பெரிய மனி தராக்குவதும் - பெரிய மனிதரை மகாப்பெரிய மனிதராக்கி விடுவதும் - மனித சுபாவங்களுள் ஒன்று ஆகிவிட்டது.

குழந்தைகளைக் கூட அவ்விதமே பழக்கினர்கள் பெரியவர்கள். பக்தி பண்ணுவதற்குரிய பெ ரி ய மனிதர் என்ற தன்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட தால், குழந்தைகள் அவரைக் கண்டதும் ஒதுங்கிப் போவதே மரியாதை என்று கருதினர்கள்.

கொடிய வியாதி மனிதனைத் தனியனுக்கி விடு கிறது. பணமும் பதவியும் புகழும்கூட மனிதரைத் தனியராக்கிவிடும்.

பதவியாலும் அந்தஸ்தாலும் பெரிய மனிதராகி யிருந்த இஷ்டலிங்கம் பிள்ளையையும் தனிமை, வியா தியாகப் பற்றிக்கொண்டது.

சில சமயங்களில் அதன் வேதனை எழுப்புகிற மனப் புழுக்கம் சகிக்க முடியாததாக இருக்கும். மற்றவர் களுடன. மனம் விட்டுப் பேசி, சிரித்துப் பழக விடாமல் அவரை அவருடைய அந்தஸ்து தடுத்தது. 'நம்மைவிடப் பெரியவர். அவர் முன்னுல் நாம் எப்படி சகஜமாகப் பேசிப் பழகுவது: என்ற தயக் கத்தை மற்றவர்களுக்கு அளித்தது அது.

அவருடைய கருரான போக்கும் கண்டிப்பான சுபாவமும் பிறரை அவரிடமிருந்து விலக்கியே வைத் தன. குழந்தைகளோடு விளையாடி மகிழலாம் என்று

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/92&oldid=543176" இருந்து மீள்விக்கப்பட்டது