பக்கம்:ஆண் சிங்கம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

அவர் நினைப்பார். குழந்தைகளோ அவரை பூச்சாண்டி' என்று எண்ணி முகம் சுளித்தன. அவரைக் கண் டதுமே சில குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவது முண்டு.

சிறுவன் ஒருவன் தெருவாசல் படியில் நின்று, அவர் போகும் பொழுதும் வரும் பொழுதும், "குட்மார்னிங் ஸார்!’ என்று சொல்லி, சலாம் போடுவதும் வழக்கம். ஒருசமயம் அவர் அவனேடு பேசலாமே என்று நின்ருர், ஏய் பையா, இங்கே வா' என்ருர். அவ்வளவுதான். அந்தப் பையன் பயந்து போய் எடுத்தான் ஒட்டம். அவருக்கு ஏமாற்றமாகி விட்டது. அதன் பிறகு அவன் அவர் வருகைக்காகக் காத்து நிற்பதும் இல்லை; குட்மார்னிங் சொல்ல ஆசைப்படவுமில்லை. -

தரித்திரம் மனிதனைத் தனியனுக்குகிறது. துயரம் அவனைத் தனியனுக்குகிறது. இன்பமிகுதியும் ஒரு வனைத் தனியனுக்கி விடுகிறது.

வறுமை வெயிலில் வதங்குகிறவனும், துயர நெருப்பில் வதங்குகிறவனும், இன்பநிறைவால் துடிப் பவனும் தனது உணர்ச்சிகளைப்பற்றிப் பிறரிடம் பேச வேண்டும் என்று தவிக்கிருன். அவனோடு பொழுது போக்குவதற்கு எவரும் துனே சேராதபோது அவன் திண்டாட்டமே தனி வேதனையாகி விடுகிறது.

இஷ்டலிங்கம் பிள்ளேக்கு மனைவி இல்லை. இருந் தாலாவது அவளோடு பேசலாம். சண்டை பிடிக் கலாம். எரிந்து விழலாம். தன் குறைகளைப் புலம் பலாம். உவகை மிகுதியை எடுத்துச் சொல்லலாம். மனப் பாரத்தை இறக்கி வைப்பதற்கு ஏற்ற சுமை தாங்கியாகவும் அவளே மாற்றலாமே!

ஆனல், மனைவி என்ருெருத்தி இருந்தால் அவர் அப்படி எல்லாம் அவளோடு பழகுவாரோ என்னவோ! அவரோடு ஒரு பெண் மகிழ்ச்சியோடும் மன நிறை வோடும் வாழ்ந்திருக்க முடியுமோ என்னவோ!

ĝ ı

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/93&oldid=543177" இருந்து மீள்விக்கப்பட்டது