பக்கம்:ஆண் சிங்கம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்அவருக்கு அது தேவை என்று தோன்றவில்லை. எனினும், அவனாக வலிய வந்து கேட்டதற்காக அவர் ஓரணா விற்குக் கடலை வாங்கிக்கொண்டார்.

ஆற்றங்கரைப் புல் வெளியில் அமர்ந்ததும் இஷ்ட லிங்கம் வேர்க்கடலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டு ரசித்துத் தின்றார்.

எங்கிருந்தோ அவரைக் கவனித்துவிட்ட காக்கை ஒன்று வேகமாக வந்து அவர் முன்னால் இறங்கியது. அவரைப் பார்த்து, ‘கா’ என்றது.

அதையே ‘தா’ எனும் கோரிக்கையாக ஏற்றுக் கொண்டு அவர் ஒரு கடலையைக் காகத்தின் பக்கமாக வீசினார். அது குதி நடை பயின்று நெருங்கி, கடலேயைக் கவ்வி நகர்ந்தது. தின்றது. ‘கா–கா’ என்று உரக்கக் கூச்சலிட்டது.

பிள்ளை மற்றொரு கடலையை விட்டெறிந்தார். அந்தக் காக்கை அதைக் கொத்தும் போதே இன்னுெரு காகமும் வந்தது. அதற்கும் ஒரு கடலை உதவினார் அவர்.

அப்புறம் இரண்டு மூன்று என்று பல காகங்கள் கூடிவிட்டன. அவரையே பார்த்தபடி இருந்தன.

அவர் ஒவ்வொரு காகத்தின் பக்கமும் கடலையை வீசினார். அருகாகவும், தூரத்தில் விழும்படியும், உயரமாகவும் விட்டெறிந்தார். காக்கைகளில் ஒவ் வொன்றும் குறி தவறாது கடலையை அலகுகளால் பற்றிக் கொண்டன. அவற்றின் செயல் அவருக்கு வேடிக்கையாக இருத்தது.

அவர் கடலையை ஆகாசத்தில் விட்டெறிவார். அது வேகமாக இறங்கிக் கீழ்நோக்கி வரும்போதே காக்கை ஒன்று மேலே பாய்ந்து ‘லபக்கென்று’ கடலையைக் கொத்திக் கொள்ளும். அதன் வேகமும், சிறகடிப்பும், கடலையைக் கவ்வும் நேர்த்தியும் அவருக்கு நல்ல தமாஷாகத் தோன்றின.

93