பக்கம்:ஆண் சிங்கம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


ஆகவே, அவர் கடலை ஒவ்வொன்றையும் உயரே விட்டெறிந்தார். ஏதாவதொரு காக்கை முன்னே பாய்ந்து கடலையைக் கவ்விக்கொண்டு பறப்பதைக் காணக் கான அவர் உள்ளம் உற்சாகம் அடைந்தது. ‘கலகல'வென நகைத்தார். தனது தனிமை வேதனையை-வெறுமை உணர்வை - மறந்துவிட்டார் அவர் அவ்வேளையிலே.

பெரிய மனிதர் - அந்தஸ்து மிகுந்தவர் - இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வது மற்றவர்களுக்கு வேடிக்கையாகப் படலாம். ஆனால் அவரை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கு அங்கு யாருமே இல்லை. தன்னை யாராவது பார்த்துவிடப் போகிறார் களே என்ற உணர்வும் அப்பொழுது அவருக்கு இல்லை. அவர் தன்னையும் சூழ்நிலையும் மறந்து விட்டார். தனது தனிமையைப் போக்கி, மனசுக்கு இனிமை தரக்கூடிய மருந்து ஒன்றை இஷ்டலிங்கம்பிள்ளை கண்டு பிடித்துவிட்டார்.

காக்கைகளும் அவரைக் கண்டு அஞ்சாமல் அவர் விளையாட்டில் பூரணமாக ஈடுபட்டன. அருகே நெருங்கி வந்தும், தூரப் பாய்ந்தும், மேலே பறந்தும் கடலை வராதா என்று காத்திருந்தும் அவருக்குத் தோழர்களாப் விளங்கிக் களித்தன.

கடலை பூராவும் காலியானதும் இன்னிக்கு இவ்வளவு தான்!’ என்று இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினார் பிள்ளை. அப்பொழுது அவர் உள்ளத்தில் நிறைந்து நின்ற ஆனந்த உணர்வை அவர் அதற்கு முன்னர் என்றுமே அனுபவித்ததில்லைதான்!


*
94