பக்கம்:ஆண் சிங்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

}}}}


ராமலிங்கத்துக்கு அந்த உண்மை அதிர்ச்சி தருவதாகத்தான் இருந்தது.

அதுபோன்ற அதிர்ச்சியும் தன் வாழ்க்கையில் ஏற்படக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தவனே அல்லன். எதிர்பார்க்கவும் முடியாதுதான்.

ஏமாற்றங்களும் வேதனைகளும் ராமலிங்கத்துக்குப் புதியன அல்ல. குடும்பம் எனும் சிலுவையில், பொறுப்புகள் என்கிற ஆணிகளால் அறையப்பட்டு, தனது வேதனைகளை மெளனமாய்த் தாங்கிக் கொள்ளும் ஆத்ம பலம் பெற்றிருந்தவன் அவன். வீட்டுக்கு மூத்த பிள்ளை, குடும்பத்தின் முதல்வன்.

அவனுடைய தந்தை பாண்டியன் பிள்ளை எல்லாத் தந்தையரையும் போலவே, தனது பிள்ளையாண்டான் வளர்ந்து பெரியவணாகி, ‘செயம் செயம் என்று போட்டு அடித்து’ சுகத்தோடும் செல்வத்தோடும் வாழப் போகிறான் என்று கனவு கண்டார். ஆசைப்பட்டார். அவனது ஐந்தாவது வயசு வரைதான் அந்தச் செல்லம் எல்லாம்.

அப்பொழுது ஒரு பையன் பிறந்து, ராமலிங்கத்தின் அதிர்ஷ்டத்தை அபகரித்துக் கொண்டான். இரண்டாவது மகனால்தான் தன்னுடைய வாழ்வு வளம் பெறும் என்று நம்பிய பாண்டியன் பிள்ளை, அவனுக்கு ‘பிறவிப்பெருமாள்’ என்று பெயரிட்டார். அந்தக் குழந்தை நோஞ்சானாகத்தான் பிறந்து வளர்ந்தது. அதனால் அவன் மீது அப்பாவுக்கும் அம்மைக்கும் அபரிமிதமான பாசமும் பற்றுதலும் ஏற்பட்டிருந்தன.

ராமலிங்கத்துக்கு ஆரம்பத்தில் ‘எலிக் குஞ்சுப் பயல்’ மீது உண்டான பொறாமை, நாளடைவில்

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/97&oldid=1072861" இலிருந்து மீள்விக்கப்பட்டது