பக்கம்:ஆண் சிங்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



யதுமில்லை. அடியும் ஏச்சும் வாங்கிக் கட்டுகிற வேளையில் அண்ணன் மனம் கசந்த போதிலும் தொடர்ந்து அவன் தம்பியை வெறுப்பதில்லை. வெறுக்க முடியாது அவனால். இயல்பாகவே அவன் நல்லவன்.

ராமலிங்கம் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது பாண்டியன் பிள்ளை இறந்துபோனர். அவர் இறக்கும் தருணத்தில், ராமு. உன் தம்பியைக் கவனித்துக்கொள். அவனை முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு என்று_சொல்லி வைத்தார். அதைப் பெரியவன் மறந்தது கிடையாது.

‘தம்பி படிக்க வேண்டும்; அவனுக்கு எந்தவிதமான குறையும் ஏற்படக் கூடாது’ என்பதற்காகவே ராமலிங்கம் த்ன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தான். ஒரு கடையில் வேலைக்கு அமர்ந்தான். குடும்பப் பொறுப்புகளை நன்கு கவனிக்கலானான். அவன் தனது வயசுக்கு மீறிய பொறுமையோடும் திறமையோடும் காரியங்களை நிர்வகித்து வந்ததைக் கண்டு மெச்சாதவர்கள் இல்லை என்றாயிற்று.

பையன் ஒவ்வொரு வகுப்பிலும் புதிய புதிய புத்தகங்களே வாங்க வேண்டும் என்று அடம்பிடிப்பான். அது அதிகப்படியான செலவு எனக் கருதும் அண்ணன், மலிவான விலையில் பழைய புத்தகங்கள் வாங்கிப் படித்தால் படிப்பு வரமாட்டேன் என்றா சொல்லும்?’ என்று குறிப்பிடுவான். அண்ணன் புஸ்தகம் வாங்கித் தரமாட்டேன்கிறான்’ என்று இளையவன் அன்னையிடம் முறையிடுவான். அவள் பெரியவன் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் கூட, சின்ன மகனுக்காகத்தான் பரிந்து பேசுவாள். அவனையும் உன்ன்ப்போல முட்டாள் மூதியாக்கி, மூட்டை சுமக்கிற வேலைக்கு அனுப்பனுமின்னு நினைக்கிறாயா? பொஸ்தகம் வாங்கிக் கொடுக்கலேன்னு, சொன்னா, அவன் எப்படிப் படிப்பான்? என்று குறை கூறுவாள்.

அவள் கூற்று மூத்த மகனின் இதயத்தில் குத்தும் கூர்முனை ஊசியாக இருப்பதை அவள் அறியமாட்டாள்

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/99&oldid=1072226" இலிருந்து மீள்விக்கப்பட்டது