பக்கம்:ஆதி அத்தி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி j 65 காட்சி ஒன்பது (அதே இடம். சற்று நேரம் பொறுத்து அத்தி தள்ளாடி நடந்து வருகிருன். மணலிலே தளர்ந்து விழுகிருன். ஆதிமந்தி அவனைத் தாங்கிப் பிடிக்கிருள்.1 அத்தி : மருதி...எங்கே அவள்? ஆதிமந்தி; அவள் தான் எனக்கு உயிர் கொடுத்தவள்... ஆதிமந்தி : எனக்கும் அவள்தான் உயிர் கொடுத் தாள்...அவளைக் காணுேமே! அத்தி : கடலின் பக்கம்தான் வந்தாளாம் .. (அவன் முகம் ஐயத்தால் இருண்டு தோன்றுகிறது.) ஆதிமந்தி : அதோ கடலுக்குள்ளே பாருங்கள்... அடிவானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு படகுபோலத் தெரிகிறது. அத்தி ஆமாம். அதே படகுதான்...மருதி, என்ன வேலை செய்தாய்! மருதி...மருதி... (பொன்னி வந்து சேருகிருள். கடலுக்குள் குதிக்கச் சென்ற அத்தியைத் தடுத்து நிறுத்துகிருள்.) ஆதிமந்தி : உங்கள் உடம்பிலே பலமே இல்லையே; இப்பொழுது கடலில் நீந்த உங்களால் முடியுமா? (வாய்விட்டு அலறுகிருள்.) பொன்னி : அந்தப் படகிலே யாரையும் காணுேம்... இனிமேல் நீங்கள் போய்த்தான் என்ன பயன்? காரியம் மிஞ்சிப் போய்விட்டது... அத்தி : மருதீ!...மருதி... ஆதிமந்தி : ஐயோ. எங்கள் இரண்டு பேருக்கும் உயிர்ப் பிச்சை கொடுத்த அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே!...எங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு நீ மறைந்து விட்டாயே! [விம்மி யழுகிருள்.) SASHHHHS SJSAAAAAAS AAAASS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/103&oldid=742395" இலிருந்து மீள்விக்கப்பட்டது