ஆதி அத்தி I I நான் மறந்து விட்டதாக எண்ணிவிடாதீர்கள். சேன பதி, உங்களுடை ய வீரத் தலைமையே எனக்கு வெண்ணி யிலும் பிற போர்க்களங்களிலும் சிறந்த வெற்றியைத் தந்தது. அதற்காக நான் என்றும் உங்களுக்கு நன்றி யுடையவகை இருப்பேன். சேஞபதி : வேந்தே, தங்களுடைய அன்பான வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி யளிக்கின்றன. போர்க் களத்திலே நான் காட்டிய திறமையைவிடத் தங்க ளுடைய வீர சாகசமே வெற்றிக்கெல்லாம் காரணம் என்பதை நான் அறியாமலில்லை. இருப்பினும் தங்க ளுக்குத் துணையாக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தமைக் காக நான் பெருமையடைகிறன். அமைச்சர் போரிலே சிறந்த வெற்றிகள் பெற்ற தோடு நாட்டை வளப்படுத்துவதிலும் நமது வேந்தர் சிறந்த வெற்றி பெற்றிருக்கிருர். காவிரிக்குக் கரை யமைத்து இந்த நாட்டைச் செந்நெற் களஞ்சியமாகச் செய்தவரும் அவர்தானே? சேனபதி : அரசே, தங்களை மக்கள் கரிகாற் பெரு வளத்தான் என்றே கூறித் தாங்கள் இந்த நாட்டின் வளத்தைப் பெருக்கியதைப் பாராட்டு கிருர்கள். கரிகாலன் : நாட்டின் செழிப்பு மிகுந்ததையும் அதற்குக் காரணமாக அமைந்த காவிரியாற்றின் பெருக் கையும் கொண்டாடிப் புதுப்புனல் நீராட்டு விழா ஏற் பாடு செய்திருக்கிருேமல்லவா? அந்த விழாவிலே மக்கள் மிகுந்த உற்சாகங் காட்டுவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதை நமது நாட்டின் முக்கிய மான விழாக்களில் ஒன்ருகச் செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அமைச்சர் : நமது சோழ நாட்டின் வளத்திற் கெல்லாம் காவிரித் தாய்தான் முக்கிய காரணமாக இருக்
பக்கம்:ஆதி அத்தி.pdf/12
Appearance