பக்கம்:ஆதி அத்தி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I? ஆதி அத்தி கிருள். ஆதலால் காவிரியிலே புதுவெள்ளம் பெருகு கின்ற ஆடி மாதத்திலே புனலாட்டு விழாவை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுவதிலும் நல்ல பொருத்த மான காரணம் இருக்கின்றது. மேலும் சோழ வேந்த ராகிய தாங்களே இந்த விழாவிலே உற்சாகங் காட்டு வதும் காவிரியின் கரையிலே மக்களோடு தங்கி அங்கு நடக்கும் கேளிக்கைகளிலே கலந்து கொள்வதும் மக்க ளுக்கு இன்னும் அதிகமாக உற்சாகத்தைக் கொடுத் திருக்கின்றன. சேனபதி : வேந்தே, தாங்கள் மட்டுமின்றி அரசி யாரும் இளவரசி ஆதிமந்தியும் ஆடிப் புதுநீர் விழாவில் ஆர்வத்தோடு கலந்து கொள்வது எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இளவரசி ஆதி மந்தி சென்ற முறை விழாப் பந்தலில் ஆடிய நடனத் தைப் பற்றிப் புகழ்ச்சியாக இன்னும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிருர்கள். கரிகாலன் : சேனபதி, அன்று நடந்த நாட்டியத் திற்கு விழாப்பந்தலிலே நீங்கள் செய்திருந்த ஒழுங்கு ஏற்பாடுகள் மிகவும் பாராட்டுதற்குரியன. சேனபதி : நம் நாட்டிலே இப்பொழுது போரே ஒழிந்துவிட்டது: பகைவர் என்று எதிர்த்து வரக்கூடி யவர் யாருமில்லை. பெரிய விழாக் காலங்களிலாவது நமது வீரர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியையும் கட்டுப் பாட்டையும் காட்ட வேண்டாமா? அமைச்சர் : புதுப் புனலாட்டு விழா அதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அளிக்கிறது. அந்த விழாவிலே நமது படை வீரர்களின் திறமையை அறிந்து கொண்டதோடு குடிமக்களின் மனப் போக்கையும் அறிந்து கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/13&oldid=742399" இருந்து மீள்விக்கப்பட்டது