பக்கம்:ஆதி அத்தி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 ஆதி அத்தி பிற நாடுகளிலும் அறிந்து கொண்டிருக்கிரு.ர்கள். இது சோழ மரபிற்கே பெருமை தந்திருக்கிறது. (சேவகன் ஒருவன் முன்வந்து வணங்குகிருன்.) கரிகாலன் (சேவகனப் பார்த்து) : சேவகா, என்ன செய்தி? சேவகன் : சோழ வேந்தே. தங்கள் தரிசனத்திற் காக நாட்டியக்காரர் ஒருவர் சமயம் பார்த்து நிற்கிரு.ர். கரிகாலன் : நாட்டியக்காரா? சேவகன் : ஆம், அரசே-அவர் தம்முடைய பெயர் அத்தி என்று தெரிவித்தார். சேர நாட்டிலிருந்து வந்திருக்கிரு.ராம். கரிகாலன் : அப்படியா? அவரை இங்கே வரும்படி சொல். (அமைச்சர் பக்கம் திரும்பிப் பார்த்து) அமைச்சரே, நீங்கள் இந்த நாட்டியக்காரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமைச்சர் : நான் கேள்விப்பட்டதில்லை; இப் பொழுதுதான் அவர் முதல் முறையாக நம் நாட்டுக்கு வருகிருர் போலிருக்கிறது. (அத்தி எதிரில் வந்து நின்று வணங்குகிருன். உடல் வனப்பும் மிடுக்கான தோற்றமும் உடைய இளைஞன் அவன்.) அத்தி : கரிகாற் பெருவளத்து வேந்தே, எனது வணக்கம். நான் சேர நாட்டைச் சேர்ந்தவன்; அத்தி என்பது என் பெயர். நாட்டியக் கலையை ஆர்வத்தோடு தாங்கள் போற்றி வளர்ப்பதை அறிந்து தங்களைக் காண நான் வந்திருக்கிறேன். கரிகாலன் : கலைஞர்கள் எந்த நாட்டிலிருந்து வந் தாலும் அவர்களே ஏற்றுப் பாராட்டுவது இந்த நாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/15&oldid=742401" இருந்து மீள்விக்கப்பட்டது