பக்கம்:ஆதி அத்தி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i & ஆதி அத்தி எந்த வேளையிலும் நமது கடமையைச் செய்ய ஆர்வத் தோடிருப்போம். (செல்லுகிருர்கள்.) திரை காட்சி இரண்டு (மாலை நேரம். கரிகாலனுடைய அரண்மனையைச் சேர்ந்த கலையரங்கு அழகாகவும் பொருத்த மாகவும் அணி செய்யப்பட்டு விளங்குகின்றது. மந்திரி சேனபதி முதலியவர்களும் பிரமுகர் களும் உரிய ஆசனங்களில் அமர்ந்திருக்கிருர் கள். சோழன் கரிகாற் பெருவளத்தான், அரசி வேண்மாள், இளவரசி ஆதிமந்தி ஆகியோர் தனிப்பட முன்னல் தமக்குரிய ஆசனங்களில் இருக்கிருர்கள். அத்தி அற்புதமாக நடன மாடிக்கொண்டிருக்கிருன். அந்த நடனத்திலீடு பட்டு அனைவரும் மெய்மறந்திருக்கிருர்கள். தங்கத்தில் வார்த்தெடுத்த பதுமைபோல் அசைவற்று ஆதிமந்தி நடனத்தில் ஆழ்ந்திருக் கிருள். நடனத்திற்கான பின்னணிப் பாட்டுக் கேட்கிறது.1 (பாட்டு) பல்லவி ஆகந்த நடனமாடினர்-அம்பலந்தனில் ஒரு காலைத் தூக்கி அழகாகவே- (ஆகந்த) அனுபல்லவி வானந்தனைக் கடந்த பரவெளியில் வளர் ஜோதியாய் கின்ற பெருமான் தானந்தமில்லாத விளையாடல் செய்தே சகல லோகமு மாக்கியோர்- (ஆநந்த)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/19&oldid=742405" இருந்து மீள்விக்கப்பட்டது