பக்கம்:ஆதி அத்தி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 19 சரணம் ஓர் கரத்தே டமருகம் தோற்றம் காட்டிட ஓங்கனல் மறு கரத்தே அழிவு கூட்டிட உவந்தே நாரணன் மத்தளம் போட ஒய்யாரமாய் அயனரது தாளம் கூட ஆர்ப்பரித்தே அடங்கியே அன்னை சிவகாமியும் அடியார் முனிவோர் பரவசமாகவே அண்டமெலாம் அதிர்ந்து கிடுகிடுங்க ஆதி சேஷனும் உடல் நெளிந்து நடு நடுங்க (ஆகத்த) கரிகாலன் : ஆஹா! எவ்வளவு உயர்ந்த நடனம்! தில்லையில் ஆடுகின்ற பெருமானின் திருநடனத்தின் பெருமையை விளக்குவதற்குச் சேரநாட்டு அத்தியின் ஆட்டத்தைப்போல வேருென்றுமிருக்க முடியாது. வேண்மாள் : இவர் ஆட்டத்திற்கே பிறந்தவர். இப்படிப்பட்ட நடனத்தை நான் கண்டதில்லை. கரிகாலன் : நீ சொல்வது முற்றிலும் சரி, இவர் ஆட்டத்திற்கே பிறந்தவர்தான். ஆதலால் இவருக்கு ஆட்டன் அத்தி என்ற சிறப்புப் பட்டத்தை நான் அளிக்க விரும்புகிறேன். (அப் பாட்டிற்கு நடனம் முடிகிறது. எல்லோரும் கை தட்டுகிருர்கள்.) கரிகாலன் . அத்தியே, உங்களுடைய சிறந்த நடனத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்ற நாங்கள் உண்மையில் பாக்கியம் செய்தவர்களாளுேம். நடனக் கலேயே உங்களால் ஒரு தனிமதிப்பைப் பெற்றுவிட்டது. அத்தி (மகிழ்ச்சியோடு) : சோழவேந்தே, தங்களுக் குத் திருப்தி ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றுதான் என் கலை முயற்சி பூரணமடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/20&oldid=742406" இருந்து மீள்விக்கப்பட்டது