பக்கம்:ஆதி அத்தி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 ஆதி அத்தி (ஆதிமத்தி அத்தியையே உற்று நோக்கி மெய்மறந் திருப்பதையும் அத்தி அவளை அன்போடு பார்ப் பதையும் கரிகாலனும் வேண்மாளும் கவனிக் கிருர்கள். பிறகு கரிகாலன் அத்தியைப் பார்த்துப் பேசுகிருன்.) கரிகாலன் : நீங்கள் ஆட்டத்திற்கே பிறந்தவர்கள் என்று சற்று முன்புதான் அரசி வேண்மாள் என்னிடம் கூறிக்கொண்டிருந்தாள். அவள் கூறியது முற்றிலும் பொருத்தம் என்று நான் முழுமனதுடன் ஆமோதித் தேன். ஆட்டத்திற்கே பிறந்த உங்களுக்கு ஆட்டன் என்ற சிறப்புப் பெயரையும் இந்தச் சபையோர் முன்னிலை யில் அளிக்க விரும்புகிறேன். |சபையோர் அரசன் கூறியதை மகிழ்ச்சியோடு ஆமோதித்து உற்சாகமாகக் கைதட்டுகிருர்கள். அத்தி பூரிப்போடு தலை வணங்கி அதை ஏற்றுக் கொள்கிருன்.) அத்தி : வேந்தே, இன்று எனது ஆவல் நிறை வேறியது. தங்களிடம் நன்மதிப்பைப் பெறுவதைவிட உயர்ந்த பாக்கியம் வேறென்ன இருக்கிறது? இதற்கு நான் பெரிதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். தாங்கள் விரும்பியளித்த சிறப்புப் பெயர் எனக்கு எல்லை யில்லாத இன்பத்தைக் கொடுக்கிறது. |இந்தச் சமயத்தில் அமைச்சரிடம் யாரோ ஒருவர் வந்து காதோடு பேசுகிரு.ர்.) அமைச்சர் (எழுந்து நின்று) : சோழ வேந்தே, இந்தச் சமயத்தில் நான் முக்கியமான ஒரு உண்மை யைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நாட்டியக் கலைஞர் அத்தி யாரென்று அறிந்துகொள் வதற்காகச் செய்த முயற்சி இப்பொழுதுதான் வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/21&oldid=742407" இருந்து மீள்விக்கப்பட்டது