பக்கம்:ஆதி அத்தி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 21 யடைந்தது. இவர் சாதாரண மனிதர் அல்ல; இவரே தான் சேரநாட்டு இளவரசர் அத்தி. கரிகாலன் (ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க) : அப்படியா! எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி சேர இளவரசே, நீங்கள் ஏன் இதை முன்பே எனக்குத் தெரி விக்கவில்லை. அத்தி : கலைஞன் என்ற முறையிலேயே அரசவை யில் உரிய பாராட்டுப் பெறவேண்டும் என்று எண்ணி வந்தேன். இளவரசன் என்பதற்காக எனது கலைக்குப் பாராட்டுப் பெற நான் விரும்பவில்லை. தாங்களும் அவ்வாறு பாராட்ட மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். கரிகாலன் : உங்களுடைய நோக்கத்தை நான் போற்றுகிறேன். கலைக்குக் கிடைக்கும் மரியாதை அக் கலையின் சிறப்பைப் பொறுத்ததாகவே இருக்கவேண்டும் மற்ற உயர்வுகளைக் கொண்டு அதை மதிப்பிடலாகாது அத்தி : சோழ வேந்தே, நான் சேரனுட்டு இள வசரனென்று தெரிவித்துக்கொள்ளாததற்கு முக்கிய மான வேறு காரணமும் உண்டு. இதற்குள்ளாகத் தாங்களும் ஒருவாறு அதை யூகித்துக்கொண்டிருப் பீர்கள். அந்தக் காலத்திலே தங்களுடைய இளமையை எண்ணித் தங்களை வென்று, தங்கள் நாட்டைக் கைப் பற்ற எண்ணிய வேளிர்குலத் தலைவர்களும், பாண்டிய னும் செய்த சூழ்ச்சியில் எனது தந்தையாரும் சிக்குண் டார் என்பது தாங்கள் அறிந்த செய்தியே. எனது தந்தையார் அவர்களுக்கு இடங்கொடுத்தது என் தந்தை யாரின் பிழையல்ல; அது விதியின் பிழையென்றே நான் கருதுகிறேன். நான் சிறியவனயினும் அவருடைய செயலை அன்று நான் ஆமோதிக்கவில்லை என்பதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/22&oldid=742408" இருந்து மீள்விக்கப்பட்டது