பக்கம்:ஆதி அத்தி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆதி அத்தி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அப்பொழுது ஏற்பட்ட பகையின் காரணமாகவே நான் மாறு பெய ரோடு இந்த நாட்டிற்கு வந்து நாட்டியம் பயில நேர்ந் தது. அதை எண்ணியே நான் இன்னனென்று தெரி வித்துக்கொள்ள இதுவரையிலும் விரும்பவில்லை. கரிகாலன் : அந்தப் பழைய சம்பவங்களெல்லாம் முன்பே மறந்த விஷயம் ஆயிற்றே-அதைப்பற்றி நீங்கள் இன்னும் எதற்காக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இப்பொழுது சேரநாடு சோழ நாட்டோடு தோழமை பூண்டுதானே இருக்கிறது? அத்தி : இருந்தாலும் எனது தந்தையார் தங்கள் பகைவர்களோடு சேர்ந்து கொண்டதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன். அதனலேயே நான் யாரென்று தெரிவித்துக் கொள்ளாமல் எனது கலைத் திறமையால் தங்கள் மனத்திலே இடம்பெற நினைத்து வந்தேன். கரிகாலன் : உங்கள் நாட்டியத்தால் என்னை முற் றிலும் கவர்ந்து விட்டீர்கள். அதோடு சேரலாத னுடைய மைந்தன் என்பதாலும் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர் ஆகின்றீர்கள். சேரலாதன் வெண்ணிப் போரிலே காயமடைந்ததை எண்ணி தானமுற்று வடக்கிருந்து உயிர் துறந்ததை நான் அறி வேன். அப்படி வடக்கிருந்து உயிர் துறந்த உமது தந்தையார் வெண்ணிப் பொரிலே வெற்றி பெற்ற என்னைவிட நல்லவர் என்று வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் பாடியதை நான் ஆமோதிக்கிறேன். போரில் ஏற்படும் வெற்றியைவிட உயர்ந்த பண்பில் ஏற்படும் பெருமையை நான் இன்று மேலாக மதிப்ப தற்குச் சேரலாதனின் செய்கையே முக்கிய காரணமாக இருக்கின்றது. அவரை நான் போற்றுகிறேன். அவர் மைந்தன் என்பதற்காக உங்களையும் பாராட்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/23&oldid=742409" இருந்து மீள்விக்கப்பட்டது