ஆதி அத்தி 23 அத்தி : அரசே, தங்களுடைய பெருந்தன்மைக்கும் பரந்த நோக்கிற்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக் கிறேன். கரிகாலன் : பழைய நிகழ்ச்சிகளை இனி நீங்கள் மறந்துவிடுங்கள். அவற்றிற்கும் உங்களுக்கும் எவ்வகை யான சம்பந்தமும் இல்லை யென்பதை நீங்கள் பல வகை களிலே நிரூபித்திருக்கின்றீர்கள். மேலும் எங்கள் நாட்டுக் கலையில் ஈடுபட்டு இந்த நாட்டிற்கு வந்த நீங்கள் எங்களுக்குப் பெரிதும் உரியவராகின்றீர். அத்தி : சோழ வேந்தே, தங்களுடைய அன்பு என்னைப் பரவசப் படுத்துகிறது. ஒர் ஆசையை வெளிப்படுத்தலாமென்ற துணிச்சலையும் தருகின்றது. கரிகாலன் : தங்களுடைய விருப்பத்தை வெளிப் படையாகக் கூறுங்கள்: தயக்கம் வேண்டாம். அத்தி : அரசே, எனது நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து தாங்களே எனக்கு ஆட்டன் என்ற பட்டம் தந்தீர்கள். தாங்களே விரும்பியளித்த பரிசு அது. அதற்காகத் தங்களைப் போற்றுகிறேன். அதே சமயத்தில் நானே விரும்பிக் கேட்கும் பரிசொன்று தங்களிடம் உள்ளது என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதை இப்பொழுது கேட்க φυιτLΕΙτ2 கரிகாலன் : ஆ ட் ட ன த் தி, வெளிப்படையாக நீங்கள் விரும்புவதைக் கூறுங்கள், கலைஞர்களைச் சோழர்கள் எவ்வாறு பாராட்டுகிருர்கள் என்பதை விரைவில் அறிந்து கொள்வீர்கள். அத்தி : அரசே, நான் பரிசாகப் பெற விரும்பும் மாணிக்கம் ஒன்று இங்கே இந்தச் சபையிலேயே இருக் கின்றது. அது எனக்குக் கிடைக்குமானல் நான்
பக்கம்:ஆதி அத்தி.pdf/24
Appearance