பக்கம்:ஆதி அத்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 25 (வேண்மாள் ஆவலோடு எழுந்து மகளருகில் சென்று அவளை அணைத்துக்கொள்கிருள். கர்தில் ஏதோ கூறுகிருள். பிறகு அரசனுக்குப் பதில் தெரிவிக்கிருள்.) வேண்மாள் : இதில் எனக்கென்ன தடையிருக்கப் போகிறது? என் மகளின் உள்ளம் எவ்வாறிருக்குமோ என்றுதான் நான் முதலில் சிறிது கலக்கமடைந்தேன். ஆனல் அதை இப்பொழுது நான் நன்ருக அறிந்து அவள் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன். எனக்கு இது பெரிய மகிழ்ச்சிக்குரிய நாளாகும். (ஆட்டனத்தி கரிகாலனுக்கும் வேண்மாளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தலைவணங்கு கிருன். பிறகு அவன் பார்வை ஆதிமந்தியின் பக்கம் செல்லுகிறது. அவள் புன்முறுவவோடு தலை குனிகின்ருள்.) கரிகாலன் : அமைச்சரே, விரைவில் திருமணத் திற்கு வேண்டிய ஏற்பாடுகளைகளைக் கவனியுங்கள். (அங்கேயுள்ள பெரு மக்களைப் பார்த்து )சோழ நாட்டுப் பெருங்குடி மக்களே, உங்கள் அனைவருக்கும் இந்தத் திருமணம் மகிழ்ச்சியளிக்குமென்று நம்புகிறேன். சேர நாட்டு இளவரசர் எல்லா வகைகளிலும் நமது இளவர சிக்கு ஏற்ற கணவராகத் தகுந்தவர். (சபையில் கைதட்டலும் மகிழ்ச்சி ஆரவாரமும் கேட்கின்றது.) சேனபதி : இதைவிடப் பொருத்தமான ஒரு திரு மண ஏற்பாடு இருக்கமுடியுமா? எனக்கு இது மிகுந்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஒருகுரல்: வாழ்க ஆட்டனத்தி வாழ்க ஆதிமந்தி!! அனைவரும் : வாழ்க! வாழ்க! (சபையோர் அனைவரும் எழுகின்றனர்; சபை கலையத் தொடங்கிறது.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/26&oldid=742412" இலிருந்து மீள்விக்கப்பட்டது