26 ஆதி அத்தி காட்சி மூன்று (மாலை நேரம் சேரநாட்டில் அழகிய சோலை. ஆதி மந்தியும் ஆட்டனத்தியும் ஒரு பாறையின்மீது அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிருர்கள்.) ஆதிமந்தி : உங்கள் நாட்டு மயில் எத்தனை அழ காக ஆடுகின்றது! அந்தி: உனது பேரழகைக் கண்டால், அந்த மயில் தான ஆடும்? ஆதிமந்தி (சிரித்துக்கொண்டே) : நீங்களும் அதற் காகத்தான் ஆடினரீர்களா? அத்தி : உன்னைப் பரிசாகப் பெற வேண்டும் என்ற ஆசையாலேயே நான் இந்த நாட்டியக் கலையைக் கற்றேன். ஆதிமந்தி (சிரித்துக்கொண்டே) : இதை நான் நம்பவே மாட்டேன். சோழ நாட்டுக்கு நீங்கள் நாட் டியக் கலையைக் கற்க வந்த பிறகுதானே என்னைப்பற்றித் தெரிந்து கொண்டீர்கள்? அத்தி : உனது அழகும் நாட்டியக் கலைச் சிறப்பும் வானலோகத்திற்குக் கூட எட்டிவிடுமே? அப்படியிருக்க இந்த மலைகளைத் தாண்டி எங்கள் நாட்டிற்கு வராதா என்ன? ஆதிமந்தி : போங்கள், உங்கள் புகழ்ச்சியெல்லாம் போதும். இப்படியெல்லாம் பேசுவதற்கு இந்த ஆண் களுக்கு யார்தான் கற்றுக் கொடுக்கிருர்களோ? அத்தி : அழகாக மலர்ந்து விளங்கும் தாமரை யைக் கண்டால் வண்டு தானகவே ரீங்காரம் செய்கிறது. அதற்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன?
பக்கம்:ஆதி அத்தி.pdf/27
Appearance