உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 27 ஆதிமந்தி : அந்த வண்டைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கிறதே இல்லை. அத்தி : வண்டின் மேலே ஏன் உனக்கு அத்தனை கோபம்? அதன் இன்னிசை உனக்குப் பிடிக்கவில்லையா? ஆதிமந்தி : இசையால் மயக்கிவிட்டுப் புதுப்புது மலர்களைத் தேடித் தேனுண்ணச் செல்லும் அற்ப குணம் படைத்ததுதானே அது? அதற்கு விரும்பித் தேனைக் கொடுத்த மலரை அடுத்த கணத்திலே அது நினைக் கிறதா? அத்தி ; ஒகோ அப்படியா! நீ குறிக்கிற விஷயம் எனக்குப் புரிகிறது. சேரநாட்டு ஆடவர்கள் வண்டு களல்ல. ஆதிமந்தி : அவர்கள் மலையிலிருந்து திடுதிடு வென்று விழுகின்ற அருவிகள். அப்படித்தானே? அத்தி : மலையிலே இருந்து விழுகின்ற அருவியின் வேகம் அவர்களுடைய அன்பிற்கு உண்டு. அந்த வேகத் தைச் சோழநாடு அறிய முடியாது. ஆதிமந்தி (சிரித்துக்கொண்டே): அப்படிச்சொல்லி விடாதீர்கள். அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதன் வேகத்தை அறிகின்றபோதே எங்கள் நாட்டுக் காவிரியின் அமைதியான போக்கை நான் போற்று கிறேன். இந்த மலையருவியின் வேகத்தைக் கண்டு நான் பயப்படுகிறேன். வேகமாக விழுகின்ற வெள்ளம் திடீ ரென்று நின்றுபோகும். ஆனால், எங்கள் காவிரி அப்படி யல்ல. அது என்றும் வற்ருத ஜீவநதி. அத்தி (சற்று கோபத்தோடு) : ஆதி. என்னுடைய அன்பை வற்றிப்போகும் மலையருவியோடு ஒப்பிடுகிருயா:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/28&oldid=742414" இலிருந்து மீள்விக்கப்பட்டது