ஆதி அத்தி 39 அத்தி கட்டி அணைத்துக்கொண்டு : சோழநாட் டுக் காரர்கள் அந்தக் காவிரியைக் கொஞ்சம் நேரம்கூட மறக்கமாட்டார்கள் போலிருக்கிறது. அடடா, அந்தக் காவிரியாக நான் இருக்கக்கூடாதா? ஆதிமந்தி தழுதழுத்த குரலில்) : காவிரி எனக்குத் தாய்-நீங்கள் எனக்கு உயிர். உயிரை மறந்துவிட்டுப் பிறகு தாயை மட்டும் நினைக்க முடியுமா அந்தி : ஆதி, உனது உள்ளம் அந்தக் காவிரிக் கரையிலே மலரும் அனிச்ச மலரைப் போன்றது. மோப்பக் குழையும் அனிச்சம் என்று கூறியிருக்கிருர் களே அதைப் போல உன்னுடைய் உள்ளம் அவ்வளவு மென்மையானது என்பதை நான் நன்முக உணர்கிறேன். ஆதிமந்தி : உணர்ந்து கொண்டால் ம ட் டு ம் போதாது. அந்த மலர் கொஞ்சம்கூட வாடாமலிருக் கும்படி நீங்கள் செய்யமுடியுமானல் அதுவே எனது பெரும் பாக்கியம். அத்தி (புன்முறுவலோடு) காற்று சற்று ஓங்கி வீசினலும் வாட்டமடைகின்ற அந்த மலர் இந்தக் காட்டாற்று வெள்ளத்திலே எப்படி யெல்லாம் துன்ப மடையுமோ என்று கலங்குகிருயா, ஆதி? இந்தக் காட் டாற்று வெள்ளம் அதற்கு மாருத இளமையும் உயிரும் கொடுக்கும் என்பதை நீ உறுதியாக நம்பு. ஆதிமந்தி (பெருமகிழ்ச்சியோடு அத்தியின் மார்பகத் திலே முகத்தை வைத்துக்கொண்டு) நிறைந்த அன்பு இருக்கின்ற இடத்திலே எப்படியோ நிறைந்த பயமும் பிறக்கின்றது. இந்த அன்பு மாயமாக மறைந்துவிடக் கூடாதே என்று நெஞ்சு அடித்துக்கொள்கிறது. அத்தி (ஆதிமந்தியைக் கையால் அணேத்துக் கொண்டு) . உனது பயத்தையும் கலக்கத்தையும் கண்டு
பக்கம்:ஆதி அத்தி.pdf/30
Appearance