பக்கம்:ஆதி அத்தி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆதி அத்தி எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. எதற்காக இந்த வீண் பயம்? ஆதிமந்தி : நான் எனது உள்ளத்தைத் திறந்து அதிலே ஒளிந்துகொண்டிருக்கிற அத்தப் பயத்தைச் சொல்லலாமா? அத்தி : உடனே சொல்லிவிடு. வெளிப்படையாகப் பேசிவிட்டால் பயம் தானகப் போய்விடும். ஆதிமந்தி: உங்களுடைய அன்பின் முழுவேகத்தை யும் உணர்ந்து நான் உள்ளம் பூகிக்கிறேன். அப்படிப் பூரிக்கின்ற போதே நான் பரிசாக உங்களுக்குக் கிடைத்த பொருள்தானே; இருவருமாகச் சந்தித்துக் காதல் கொண்டு அந்தக் காதலின் விளைவாகக் கிடைத்த பொரு ளல்லவே என்று நான் கலங்குகின்றேன். பரிசுப் பொரு வளிடத்திலே அத்தனை மாருத காதல் ஏற்பட முடியுமாக (கலக்கத்தோடும் கெஞ்சிய பார்வையோடும் அத்தி யைபு பார்க்கிருள். அத்தி அவளை அனைத்து அவள் கன்னத்தைத் தீண்டுகிருன்.) அத்தி : காவிரித் தண்ணிருக்கு நான் தோற்றுத் தான் போனேன். ஆதி. அது எத்தனை அற்புதமாக உணர்ச்சிகளையும் அறிவையும் உண்டாக்கியிருக்கிறது! அந்தக் காவிரியின் வற்ருத வளத்திற்கும் எங்கள் மேற்கு மலைத்தொடர் முக்கிய காரணம் என்பதை நீ அறிய மாட்டாயா? ஆதிமந்தி : உங்கள் மலைத்தொடருக்கு அந்தக் கருணை மாருமல் இருக்கவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். அத்தி : ஆதி, இந்த பயத்தையெல்லாம் விட்டு விட்டு அற்புதமாக ஒரு நடனம் ஆடு. இன்பமான இந்த மாலை நேரத்தை இப்படிக் கலக்கத்திலும் பயத்திலும் வீணுக்கவேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/31&oldid=742418" இலிருந்து மீள்விக்கப்பட்டது