பக்கம்:ஆதி அத்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 31 ஆதிமந்தி : புதிதாக நீங்கள் ஒரு பாட்டுப் புனைத் தீர்களே...? அத்தி : நான் அதைப் பாடுகிறேன்-நீ அபிநயம் பிடிக்கிருமா? (தனது சம்மதத்தை ஆதிமந்தி தலையசைத்து மகிழ்ச்சியோடு தெரிவிக்கிருள். பாறையில் அமர்ந்து அத்தி பாடுகிருன். அவள் கூடவே பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்கிருள்.) (பாட்டு) பல்லவி என்னென்று சொல்வேனடி-தோழி எனக்கவர் தந்தபே ரின்பத்தை வாயில்ை (என்னென்று) அனுபல்லவி என் னெஞ்சங்தான் கவர்ந்த மின்னஞ்சும் வேல்முருகன் வங் தென்னக் கைபிடித்தே முத்தமிட்டான் (என்னென்று) சாணம் குங்கும வண்ணனவன் கூந்தலில் பூமுடித்தான் கொஞ்சியென யணைத்தே கூடவா என்று சொன்னுன் இங்கென்னுடல் மறந்தேன் இருவினைதான் துறந்தேன் துன்பமும் தீர்ந்ததடி (பிறவித்) தொல்லையும் ಶ್ಗ * (என்னென்று) (பல்லவியை இருவருமாகப் பாட ஆதிமந்தி மெய் மறந்து ஆடுகிருள். நடனம் உணர்ச்சியின் சிகரத்திலே முடிகிறது.) அத்தி : ஆகா, அற்புதம் அற்புதம்! ஆதிமந்தி (பெருமகிழ்ச்சியோடு) : நீங்கள் எழுதிய பாட்டு வேறு எப்படி யிருக்கும்? அற்புதமாகத்தான் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/32&oldid=742419" இலிருந்து மீள்விக்கப்பட்டது