ஆதி அத்தி 33 அத்தி : ஆடற் கலையைக் கண்டு மகிழ்ந்து பெண் கொடுத்தது நீங்கள் புதிதாக ஒன்றும் செய்துவிட வில்லையே? நாங்கள் முன்பே செய்ததைப் பார்த்துத் தானே நீங்கள் இப்பொழுது செய்திருக்கிறீர்கள்? ஆடற் கலைக்காகப் பெண் கொடுப்பது எங்களுக்குப் புதி தல்லவே? ஆதிமந்தி (யோசனையோடு) : நீங்கள் அப்படி என்ன செய்திருக்கிறீர்கள்? அத்தி : சிவபெருமானுடைய ஆடலைப் பாராட்டி மலையரசன்தானே முதலில் தன் பெண்ணைப் பரிசாகக் கொடுத்தான்? ஆதிமந்தி (மகிழ்ச்சியோடு சிரித்து) : ஓகோ அப்ப டியா? அந்த நடராஜர் தில்லையில் செய்தது போல நீங்களும் எங்கள் நாட்டிற்கு வந்து எல்லோர் முன்பும் ஆடி என்னைத் தோற்கடித்து அவமானப் படுத்திவிடா தீர்கள். அத்தி : இல்லை...இல்லை...... அந்த நடராஜரைப் போல உடம்பில் பாதியைக் கொடுக்காமல் உனக்கு என் உடல் உள்ளம் எல்லாம் முழுதுங் கொடுத்து விடுகிறேன். ஆதிமந்தி (அத்தியின் மார்பின்மேல் சாய்ந்து கொண்டு தழுதழுத்த குரலில்) : அன்ப. நமது வாழ் நாள் இப்படியே இன்பமாகக் கழிய வேண்டுமென்று அந்த நடராஜப் பெருமானையே நாம் வேண்டிக் கொள் வோம். (தோழிப் பெண் ஒருத்தி வந்து எதிராக வணங்கி நிற்கிருள். ஆதிமந்தி சற்று விலகிப்போகிருள்.) அத்தி : என்ன...ஏதாவது சேதியுண்டா? தோழி : சோழ நாட்டு அரசரிடமிருந்து வீரர்கள் சிலர் வந்திருக்கிருர்கள். 3
பக்கம்:ஆதி அத்தி.pdf/34
Appearance