36 ஆதி அத்தி வெள்ளம் மேலே பட்டா அதனுடைய பளபளப்புக் கெட்டுத்தான் போகும். மாரன் : ஏண்டா, என் எடம்புக்கு என்னடா குறைச்சல்? சாத்தன் : ஒண்ணும் குறைச்சலில்லை-குருதுமாதிரி தான் இருக்குது. ஆனால், அந்த நிறம் இருக்குதேதீயைத் தண்ணிரிலே போட்டு அவிச்ச மாதிரிதான்போயும் போயும் உனக்கு மாரன்னு பேர் வச்சாங்களே? மாரo : ஏண்டா மாரன்கிற பேரிலே என்னடா தப்பு? சாத்தன் : தப்பொன்னுமில்லே - ரொம்ப அழ காகத்தான் இருக்குது. கருப்பாட்டுக்கு வெள்ளாடுன்னு பேர் வச்சாங்களே அப்படித்தான், மாரன்ன மன்மதன் இல்லையா? மாரன் : மன்மதன் மட்டும் என்னைவிட ரொம்ப அளகா இருப்பானே? அவனைக் கொண்டுவாடா பார்க் கலாம். சாத்தன். டேய் இன்னிக்கு, சேரநாட்டு இளவரசர் ஆட்டனத்தியும் நம்ம ராசா மகள் ஆதிமந்தியும் நாட் டியம் ஆடப்போருக-அங்கே வந்து பாரு மன்மதனையும் ரதியையும் பார்க்க வேணும்ன மாரன் : எங்கடா ஆடப்போருங்க-அரண்மனை யிலா? சாத்தன் : இல்லிடா, புதுவெள்ள விளா நடக்கிற தில்லே-காவிரிக்கரையிலே-பெரிய பெரிய கொட்டகை யெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருக்கிறதேஅங்கேதாண்டா மாரன் : சாத்தா, இன்னும் என்னவெல்லாம் நடக்குதாம்.
பக்கம்:ஆதி அத்தி.pdf/37
Appearance