பக்கம்:ஆதி அத்தி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 37 சாத்தன் : எத்தனையோ ஆட்டங்களும், வேடிக்கை களும் நடக்கும்-பொய்க்கால் குதிரை, கரகம் எல்லாம் உண்டு. ஏண்டா மாரா உனக்கு விசயம் தெரியாதா? போன வருசத்தைவிட இந்த வருசம் ரொம்ப வேடிக்கை இருக்கும். மாரன் : அல்லாந் தெரியும்-கூட்டம் நிறைய வருவாங்கன்னுதான் அதுக்குத் தகுந்தாப்பிலே நிறைய முறுக்கு சுண்டல் தங்ார் பண்ணியிருக்கிறேன். சாத்தன் : அடடே, உன்னுடைய வியாபாரத்துக்கு கணக்குப் பார்க்கிருயா? மாரா, அதிருக்கட்டும். நம்ம கணக்கிலே நாலு முறுக்கு இப்படிக் கொடுத்திட்டுப்போ. மாரன் : ஏண்டா, போனவருசம் வாங்கினதே இன்னும் குடுக்கல்லே. முதமுதன்னு கடன கேட்கிருய்? சாத்தன் : அடே, பணம் எங்கே போகுது? எங்கிட் டிருந்தா ராசா அரண்மனையிலே இருக்கிறமாதிரி. (முறுக்கு மூட்டையைத் தொடப் போகிருன்.) மாரன் : டேய், உன்னுடைய அளுக்குக் கையில் மொத மொதன்னு தொடாதே-வியாபாரமே கெட்டுப் போகும். சாத்தன் : பணம் வேணும்னக் கைமேலே வாங்கிக் கடா-சும்மா குறும்பு பேசாதே. மாரன் ; டேய், போன வருசம் அப்படிச் சொல்லி வாங்கித் தின்னுபோட்டுத் தானே அப்புறம் கையை விரிச்சாய்? போடா-எனக்கு நேரமாகுது. (புறப்படுகிரு:ன். சாத்தன் முறைத்துப் பார்க் கிருன்.) சாத்தன் : (மாரன் போன பிறகு) : பிசுநாறிப் பயல்-காசு கைமேலே வேணுமாம் - இவனுடைய சிக்குப் பிடித்து நாறிப்போன முறுக்கு யாருக்கு வேணு լոորմb? (கம்பீரமாக நடந்து பேர்கிருன்.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/38&oldid=742425" இருந்து மீள்விக்கப்பட்டது