பக்கம்:ஆதி அத்தி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 39 சாத்தன் : வியாபாரமெல்லாம் பலமா நடக்குதா? மாரன் : அதுக்கொன்னும் குறைவில்லை-இந்தத் தடவை நம்ம மாப்பிள்ளே ராஜாவும் நம்ம ராஜகுமாரி யும் வந்திருக்காங்கல்லோ-அவங்களைப் பார்க்க ஒரே கூட்டம். எனக்கும் நல்ல வியாபாரம். அவுங்க சொகமா இருக்க வேணும். வருசா வருசம் இந்தப் புதுநீர் விழாவுக்கு வந்து எனக்கு இப்படி நல்ல வரும்படி கிடைக்கவேணும்: சாத்தன் : மாரா, காலையில்தான் மொதமொத்ன்னு கடன் குடுக்கப்படாதுன்னு சொன்னே. நானும் சரின்னு போயிட்டேன். இப்போதுதான் உனக்கு வியாபாரம் ஆயிட்டுதே-எனக்கு இப்படி ஒரு இருபது முறுக்குக் கொடு. மாரன் (திடுக்கிட்டு) : இருபது முறுக்கா? அதுவும் கடனுக்கா? சாத்தன் (அலட்சியமாக) : அடே, நாளேக்கு வீட்டுக்கு வந்ததும் உங்காசை வாங்கிக்கோ? எங்காவது ஒடியா போகுது? மாரன் : ஏண்டா டேய், முன்னே வாங்கின. கடனே இன்னும் கொடுக்கல்லே-இன்னும் கடன் கேட்க உனக்கு வாயிருக்குதா? சாத்தன் : அடே, எல்லாம் சேத்தி வாங்கிக்கலாம் கொடு-வாயிருக்குதான்னு கேக்கிறயே-மு று க் ைக க் கொடுத்துப் பாரு-வாயிருக்குதா இல்லையான்னுதெரியும மாரன் : இந்தக் கூடையை இப்பத்தாண்டா எடுத்தேன்-இன்னும் ஒரு முறுக்குக் கூட விக்கலை. சாத்தன் : டேய், காலையிலும் இப்படித்தாண்டா சொல்லி ஏமாத்திய்ை? இந்தக் குருட்டு நம்பிக்கையெல் லாம் எது க்காக நீங்க உண்டாக்கி இருக்கிறீங்கன்னு இப்பத்தாண்டா தெரிஞ்சுது எனக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/40&oldid=742428" இருந்து மீள்விக்கப்பட்டது