{{} ஆதி அத்தி மாரன் : எதுக்கு உண்டர்க்கி யிருக்குதாம்? சாத்தன் : எதுக்கு? என்னைப்போல ஆளுகளே ஏமாத்தத்தான். இருக்கிறவன் இல்லாதவனை ஏமாத்தற தந்திரமடா இது. காலேயிலே வந்தா-காலங்காத் தாலே கொடுக்க முடியாது.டாங்கிறது-ாாத்திரி வந்தா -இருட்டு நேரத்திலே கடன் கொடுக்கப்படாதுங்கிறது -வெள்ளிக் கிழமை வந்தா-இன்னிக்கி வெள்ளிக் கிழமைங்கிறது-இன்னொரு நாள் வந்தா இன்னைக்கு என் பிறந்தநாள்-இன்னைக்கு நான் கடன் கொடுக்கிற தில்லைங்கிறது-வாரத்திலே ஏழு நாளைக்கும் ஏதாவது இப்படி சாக்குக் கண்டு பிடிக்கிறது. மாரன் : டேய் சாத்தா, சும்மா ஏண்டா ஊரை யெல்லாம் பேசராய்? அன்னைக்கு நீயே என்கிட்ட இதே சாக்குத்தான் சொன்னுய்? சாத்தன் : நானெங்கடா சொன்னேன்? மாரன் : ஏண்டா, மாவரைக்கிற கல்லொன்னு அடிச்சுக் கொடுக்கச் சொன்னதுக்கு நீயும் அன்னைக்கும் திங்கட்கிழமைகடன அடிக்கமாட்டான்னு சொன்னயோ இல்லையோ? சாத்தன் (மாரனிடம் வாதாட்டத்திலே தோல்வி யடைந்து கொஞ்ச தூரம் திரும்பிச் சென்று பிறகு சிரித்துக் கொண்டே வந்து) : மாரா, அதேல்லாங் கிடக்குதடா-சமயத்துக்கு என்ன வேணும்னலும் நமக்கு லாபமா இருக்கிருப்படி சொல்லத்தான் வேணும் -நான் நாளைக்கே உனக்கு ஒரு கல்லு அடிச்சுக் கொடுத் திடறேன். பளைய பாக்கி புதுப்பாக்கி எல்லாத்தையும் அதிலே தீத்துடறேன். எங்கே இப்படி முறுக்கை எடு. மாரன் ! டேய், என்ன பண்ணிஞலும் முறுக்கை மாத்திரம் மறக்கமாட்டாய். சரி வா. அந்தப் பக்கத்திலே
பக்கம்:ஆதி அத்தி.pdf/41
Appearance