பக்கம்:ஆதி அத்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி đ1 பெரிய கொட்டகையில்லே? அங்கே நம்ம இளவரசியும் சேரநாட்டு இளவரசரும் நாட்டியம் ஆடருங்களாம்அங்கேபோய் நாலு காசுக்கு வித்துட்டு அப்புறம் உனக்கு அளுகிறேன் வா. சாத்தன் : ஏண்டா எனச்கு அளுகிருய்? சிரிச்சுக் கிட்டுக் கொடுக்கப்படாதா? நான் கொடுக்கிற காசு அளுகுமா?

  • மாரன் : நீ ரொம்பக் காசு கொடுத்திவன்தான்

வாடா போகலாம். சாத்தன் : கொட்டகையிலே நாட்டியமா? மாரன் : ஆமாண்டா, ஆதிமந்தி, ஆட்டனத்தி நாட்டியம்டா...பார்க்கக் கொடுத்து வைக்க வேணும்டா. சாத்தன் : டேய், மாரா-நீ நாட்டியம் பார்க்கவா போராய்? ஏண்டா உனக்கு நாட்டியம்ன என்னன்னு தெரியுமாடா? மாரன் : உனக்குத்தர்ன் ரொம்பத் தெரியுமோ? சாத்தன் : ஏண்டா, அங்கே கூட்டம் அதிகமா இருக்கும், முறுக்கு நல்லா வியாபாரமாகும்னுதாண்டா ஒடரே? மாரன் : சாத்தா, கண்ணு நாட்டியத்தைப் பார்த்தா வாய்க்கு வேலை வாண்டாமா? சாத்தன் (தலையை அசைத்துக் கொண்டு) : ஆமா, ஆமா, வேணும் வேணும். அங்கே ராசா மக்களெல்லாம் கண்ணுக்கு வேலை கொடுத்தா உன்னுடைய முறுக்கு வாய்க்கு வேலை கொடுக்கத்தான் வேணும். போடா போ. மாரன் (நடந்துகொண்டே) : அப்போ, உனக்கு முறுக்கு வேண்டாமே? கண்ணுக்கு விருந்தே போதுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/42&oldid=742430" இலிருந்து மீள்விக்கப்பட்டது