உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 43 சரனம் ஆதிமந்தி : {பாட்டு) மலர் வாயின் சிறுநகையால் மாநிலத்தைக் கவர்மாயன் கிலவொளியில் வருவாரோ நிறை சுகமே தருவாரோ (ஆதிமந்தி ஒருபுறம் நிற்கிருள். அத்தி சரணத்தின் மற்ற இரு அடிகளையும் பாடி வருகிருன்.1 அத்தி : (பாட்டு) கயல் போன்ற விழியுடையாள் கன்னி யென்றன் ராதாவின் காதலுக்கோர் எல்லையுண்டோ கருதி யெனத் தேடிவந்தாள். (பிறகு இருவருமாகச் சேர்ந்து பல்லவிக்கு அபிநயம் பிடித்துச் சேர்ந்து மகிழ்ச்சியோடு ஆடி நிற் கிருர்கள். அபிநயத்தைப் பாராட்டி அங்குக் கூடியிருந்த பிரமுகர்களும் மக்களும் கைதட்டி ஆரவாரம் செய்கிரு.ர்கள்.) ஒரு குரல் : வஞ்சி நாட்டு இளவரசர் ஆட்டனத்தி பல்லாண்டு வாழ்க! (பல்லாண்டு வாழ்க, வாழ்க என்று எல்லோரும் உற்சாகத்தோடு முழங்குகிருர்கள்.) வேருெரு குரல் : எங்கள் இளவரசியார் ஆதிமந்தி பல்லாண்டு வாழ்க! (பல்லாண்டு வாழ்க, வாழ்க என்று மேலும் உற்சாகத்தோடு அனைவரும் முழங்குகிருர்கள். அத்தியும் ஆதிமந்தியும் மக்களுக்கு வணக்கம் செய்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிருர்கள்.) அத்தி : சோழநாட்டுப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித் துக் கொள்ளுகிருேம். உங்கள் அன்பிற்கும் ஆசிமொழி களுக்கும் நாங்கள் என்றும் கடமைப் பட்டிருக்கிருேம். உங்கள் அன்பு எங்களிடம் என்றும் நிலைத்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/44&oldid=742432" இலிருந்து மீள்விக்கப்பட்டது