உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆதி அத்தி படியாக உங்களுக்கு இன்பப் பணி புரிவதையே எங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளுவோம். (மறு முறையும் அத்தியும் ஆதியும் தலைவணங்கு கிரு.ர்கள். மக்கள் கைதட்டி ஆரவாரம் செய் கின்றனர்.) மற்ருெரு குரல் : எங்கள் சோழ வேந்தர் கலை வள்ளல் கரிகாற் பெருவளத்தான் பல்லாண்டு வாழ்க! (அனைவரும் பல்லாண்டு வாழ்க என்று முழங்கு கிரு.ர்கள்.) நான்காம் குரல் : எங்கள் அரசியார் வேண்மாள் பல்லாண்டு வாழ்க! (மக்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க என்று முழங்கி மகிழ்ச்சியோடு கைதட்டுகிருர் கள். கரிகாற் பெருவளத்தானும் வேண்மாளும் எழுந்து நின்று தலைவணங்குகிரு.ர்கள்.) கரிகாலன் : அமைச்சர் பிரதானிகளே, குடிமக்களே உங்கள் அனைவருடைய அன்பையும் இன் பத்தையும் கண்டு பெருமகிழ்ச்சி எய்துகிருேம். புதுப்புனல் விழாவை இவ்வளவு உற்சாகத்தோடு நீங்கள் கொண்டாடுவதைக் கண்டு எங்கள் உள்ளம் பூரிக்கின்றது. இந்தப் புதுப் புனல் போல உங்கள் இன்பமும் பல மடங்கு வெள்ள மாகப் பெருகி ஒங்குக! அவ்வாறு உங்கள் இன்பம் பெருக வேண்டுமென்பதே எங்கள் ஆசை. அதற்காக வேண்டிய பணி புரிவதையே நாங்கள் என்றும் எங்கள் வாழ்க்கை லட்சியமாகக் கொள்ளுவோம். (மக்கள் எழுந்து நின்று உற்சாகமாகக் கைதட்டி ஆரவாரம்செய்து அரசனை வணங்குகின்றனர்.) கரிகாலன் : மக்களே. இனி அனைவரும் புதுப் புனல் ஆடி மகிழச் செல்லுவோம். அங்கே உங்கள் மாப்பிள்ளை ஆட்டனத்தி ஆற்று வெள்ளத்திலே பல அற்புதமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/46&oldid=742434" இலிருந்து மீள்விக்கப்பட்டது